இந்திய மற்றும் ஆஸ்திரேலியா தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர் முகமது ஷமியை ஆஸ்திரேலியா தொடருக்கு அனுப்ப வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இந்திய அணி நியூசிலாந்து உடனான தோல்விக்கு பின் அடுத்ததாக ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. நியூசிலாந்து தோல்வியால் அடுத்து நடக்க உள்ள ஆஸ்திரேலியா தொடரில் 4 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
தற்போது பல குழப்பங்கள் இந்திய அணியில் உள்ளது. அதில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பேட்டிங்,முதல் இரண்டு போட்டிகளில் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது முகமது ஷமியை ஆஸ்திரேலிய தொடருக்கு அனுப்புங்கள் அவர் ஆட்டநாயகனாக இந்த தொடரை வெற்றி பெற முக்கிய காரணமாக இருப்பார் என்றும் கூறியுள்ளார்.
ஷமி தற்போது ஒரு வருடத்திற்கு பின்பு ரஞ்சி கோப்பை தொடரில் மத்திய பிரதேசத்துக்கு எதிராக பெங்கால் அணியில் விளையாடினார்.இந்த போட்டியில் 19 ஓவர்கள் வீசி 54 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.