என் மனைவியை பிடிக்கல உன் மனைவியை அனுப்பு! கேரளாவில் பிடிப்பட்ட மனைவி கைமாற்றும் கும்பல்!

Photo of author

By CineDesk

என் மனைவியை பிடிக்கல உன் மனைவியை அனுப்பு! கேரளாவில் பிடிப்பட்ட மனைவி கைமாற்றும் கும்பல்!

நமது இந்தியாவில் வெளிநாட்டு கலாச்சாரங்கள் தொடர்ந்து ஊடுருவி வருகிறது. அதேபோல ஒருவருக்கு ஒருத்தன் என்ற சட்டத்தையும் தூக்கி எறிந்து விட்டது இனி வெளி நாட்டு கலாச்சாரம். தற்பொழுது வெளிநாடுகளில் மனைவிகளை கைமாறி கொள்ளலாம் என்ற பழக்க வழக்கம் இருந்து வருகிறது. தற்பொழுது அந்த கலாச்சாரம் நமது இந்தியாவில் பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் தற்போது பிடிபட்ட கும்பல் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.கேரளாவில் கோட்டையம் என்ற பகுதி உள்ளது.

இந்த பகுதியில் சங்கனாச்சேரி என்ற இடத்தில் வசித்து வரும் ஒரு இளம்பெண் தன் கணவரின் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தன் கணவர் தொடர்ந்து வேறொருவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளும்படி வற்புறுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இந்த புகார் வந்ததையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்துள்ளனர்.அவ்வாறு காவல்துறையினர் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. அதில் இவர் ஒருவர் மட்டுமல்ல பலர் கேரளாவில் தங்கள் மனைவிகளை வேறொரு நபருடன் தொடர்பு வைத்துக் கொள்ளும்படி கூறி வருவதாக அது மட்டுமின்றி இதற்கென்று மனைவிகளை கைமாற்றும் கும்பல் ஒன்று நடமாடி வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த கும்பல் குறித்து கோட்டையம் கருகாச்சலம் என்ற இடத்திலிருந்து 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் போலீசாருக்கு எர்ணாகுளம் பகுதியில் சில கும்பல் உள்ளதாக தகவல் வந்துள்ளது. அந்த கும்பலிடம் விசாரித்தபோது பல அதிர்ச்சியான சம்பவங்கள் தெரியவந்தன.இந்த மனைவிகளை கைமாற்றம் கும்பலுக்கு என்ற மெசேஞ்சர் மற்றும் டெலிகிராமில் கப்பிள் மீட் அப் கேரளா என்ற இணையதள பக்கம் உள்ளதாம்.

அதில் இந்த கும்பலில் உள்ளவர்கள் அனைவரும் பேசிக் கொள்வார்களாம். இந்த நேரத்தில் இங்கு வரவேண்டும் என்பது பற்றிய உரையாடல் இந்த மெசேஞ்சர் மற்றும் டெலிகிராமில் நடைபெறுமாம். இந்த பக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தம்பதிகள் உள்ளனர்.இவர்கள் இந்த இணையதள பக்கத்தில் மூலம் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். பின்பு எந்த இடத்தில் எங்கு சந்திக்க வேண்டும் என்பதையும் பேசிக்கொள்கின்றனர்.

சிலர் தங்கள் மனைவிகளை பணத்திற்காகவும் கைமாற்றிக்கொள்கிறார்களாம்.சமூகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும் நபர்கள் கூட இதில் உறுப்பினர்களாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மனைவிகள் கைமாறும் கும்பலில் 25 பேரை ரகசியமாக காவல்துறையினர் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த செய்தி தற்பொழுது கேரள மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.