முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்டம் காண் துவங்கியது. ஏற்கனவே முன்னாள் முதல் ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். ஒருபக்கம் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறார்கள். சமீத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் போர்க்கொடி தூக்கினார்.
அதிமுக தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்தபின் அவரின் சில செயல்பாடுகள் செங்கோட்டையனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு சில நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தினார் செங்கோட்டையன். அடுத்து அதிமுக அமைச்சர் வேலுமணியின் இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்வதற்கு முன்பே செங்கோட்டையன் கலந்துகொண்டு போய்விட்டார்.
மேலும், தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் பழனிச்சாமி நடத்தும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்பதையும் செங்கோட்டையன் தவிர்த்தார். தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அதில் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை. அதோடு, வேளான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போதும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்தார்.
இதுபற்றி பழனிச்சாமியிடம் செய்தியாளர் கேட்டதற்கு ‘இதை செங்கோட்டையனிடமே கேளுங்கள். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?’ என கோபப்பட்டார். கொங்கு பெல்ட் என சொல்லப்படும் கொங்கு மண்டலம் செங்கோட்டையன் கையில் இருக்கிறது. அவர் பழனிச்சாமியை எதிர்த்தால் அங்கு அதிமுக வாக்கு வங்கி பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் பேசினார்கள். ஆனால், அதன்பினி அவை நடந்தபோது பழனிச்சாமியிடம் நெருக்கம் காண்பித்தார் பழனிச்சாமி.
இந்நிலையில், செங்கோட்டையன் டெல்லிக்கு ரகசியமாக சென்று அமித்ஷாவை சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டார் என்பது தெரியவந்திருக்கிறது. மதுரையிலிருந்து டில்லி சென்ற செங்கோட்டையன் அமித்ஷாவிடம்ன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தி இருக்கிறார். திமுக ஆட்சி மீது மக்களுக்கு உள்ள எண்ணம், அதிமுகவிற்கு உள்ள வாய்ப்புகள் குறித்தும் அவர் பேசியதாக சொல்லப்படுகிறது. அதேபோல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அவர் சந்தித்து பேசியிருக்கிறார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.