களமாட காத்திருக்கும் செங்கோட்டையன்: எடப்பாடி பழனிசாமி எடுக்கப்போகும் அதிரடி முடிவு?

Photo of author

By Vijay

களமாட காத்திருக்கும் செங்கோட்டையன்: எடப்பாடி பழனிசாமி எடுக்கப்போகும் அதிரடி முடிவு?

Vijay

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சட்டசபை சபாநாயகர் அப்பாவுவை தனிப்பட்ட முறையில் சந்தித்தது குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதுபற்றி முன்னாள் முதல்வர் மற்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி  பதிலளிக்கும்போது, கட்சியின் ஒருமைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.

அ.தி.மு.க.வில் அனைவரும் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். தி.மு.க.வில் இருப்பதைப் போல எங்கள் கட்சியில் யாரும் அடிமையாக இல்லை. நான் யாரையும் கட்டுப்படுத்துவதில்லை. கட்சி தொண்டனாகவே செயல்படுகிறேன். எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். அதைக் கடந்த காலத்திலேயே நான் தெளிவாக கூறியுள்ளேன்” என்றார்.

அவர் தொடர்ந்து, “அ.தி.மு.க. ஒரு குடும்ப கட்சியல்ல. தி.மு.க.வுக்கு போல் வாரிசு அரசியலும் இல்லை, சர்வாதிகாரத்தனமும் இல்லை. எங்கள் கட்சியில் எல்லோருக்கும் தங்களது கருத்தை வெளிப்படுத்துவதற்கும் செயல்படுவதற்கும் முழு சுதந்திரம் உள்ளது. செங்கோட்டையன் எம்எல்ஏ., கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாதது பற்றி அவரிடமே நேரடியாக கேட்டால் நன்றாக இருக்கும். தனிப்பட்ட விஷயங்களை நான் பேச விரும்பவில்லை” என்று கூறினார்.

இ.பி.எஸ். கருத்து தொடர்பாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நிருபர்கள் சந்தித்து கேள்வி எழுப்பியபோது, அவர் எதையும் கூற மறுத்து “இதுபற்றி நான் பேச விரும்பவில்லை” என்று சொல்லிவிட்டு சென்றார்.  இந்த சம்பவம், அ.தி.மு.க.வில் உள்ள அரசியல் சூழ்நிலைகளை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. மேலும், எதிர்கட்சியான தி.மு.க.வுடன் அ.தி.மு.க.வின் போட்டி நிலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையையும் இது பிரதிபலிக்கிறது.