ருதுராஜ் உடன் விளையாட மறுத்த சீனியர் பிளேயர்கள்!!இந்த போட்டியில் விளையாடுவதற்கு வலை பயிற்சி செய்வோம்!!

Photo of author

By Vijay

Cricket: இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் ருதுராஜ் தலைமையிலான ஏ அணியுடன் விளையாட மறுப்பு.

ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள இந்திய ஏ அணியுடன் இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் விளையாட இருந்த நிலையில் பிசிசிஐ இந்த போட்டியை ரத்து செய்துள்ளது. இந்திய அணியின் மூத்த வீரர்கள் இந்த போட்டியில் விளையாட மறுப்பு தெரிவித்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் இந்த போட்டியில் நாங்கள் விளையாடுவதற்கு நாங்கள் வலை பயிற்சி செய்வோம் என கூறியுள்ளனர்.

இந்திய அணி நியூசிலாந்து உடனான போட்டியை முடித்துவிட்டு அடுத்ததாக ஆஸ்திரேலியா உடன் 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்காக நவம்பர் 12ம் தேதி அன்று இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய உள்ளது.

இந்த போட்டி தொடங்கும் முன் இந்திய அணி பயிற்சி போட்டியில் விளையாடுவது வழக்கம். இந்த முறையும் அதே போல் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. எப்போதும் இது போன்ற போட்டி தொடங்கும் முன் இந்திய அணி ஆஸ்திரேலியா ஏ அணியுடன் அனுபவம் இல்லாத வீரர்களுடன் விளையாடும் அதனால் இந்திய அணி வீரர்களுக்கு எந்த பயணம் இல்லை.

அதனால் இந்த முறை மாற்றாக இந்திய அணியை ருதுராஜ் தலைமையிலான இந்திய ஏ அணியுடன் விளையாட வைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு ரோஹித் சர்மா இந்த போட்டியில் விளையாடுவதற்கு நாங்கள் வலைப்பயிற்சி செய்வதே மேல் என்றார். எனவே போட்டி ரத்து செய்யப்பட்டு வலைப்பயிற்சி செய்ய உள்ளனர்.