ஜூனியர் மாணவனை நிர்வாணமாக மது அருந்த வைத்த சீனியர் மாணவர்கள்..எல்லை மீறிய ராகிங்க் கொடுமை..!

Photo of author

By Janani

ஜூனியர் மாணவனை நிர்வாணமாக மது அருந்த வைத்த சீனியர் மாணவர்கள்..எல்லை மீறிய ராகிங்க் கொடுமை..!

Janani

Updated on:

கல்லூரிகளில் ராகிங்க் சம்பவங்கள் பெரும்பாலான கல்லூரிகளில் நடைபெறுகின்றன. சில நேரங்களில் வெறும் கிண்டல்களுடன் செல்லும் இந்த சம்பவங்கள் உயிர்பறிக்கும் எல்லை வரை சென்றுள்ளது. ராகிங்கால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு அவர்கள் மன மற்றும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றனர். இப்படி ஒரு சம்பவம் டேராடூனில் நடந்துள்ளது.

உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி ஆய்வுகள் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைகழக்கத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல மாணவர்கள் பயின்று வருகின்றனர். அந்த பல்கலைகழகத்தில் ரிஷிகேஷை சேர்ந்த மாணவர் ஒருவர் பயின்று வருகிறார்.

இந்நிலையில், இவர் அங்குள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கி பயின்று வருகிறார். அந்த அறையில் அந்த மாணவனுடன் தங்கி இருந்த சக மாணவன் சீனியர் மாணவர்களுடன் சேர்ந்து அவரை ஆடை கழற்றச் சொல்லி நிர்வாணப்படுத்தியுள்ளனர். மேலும், அவரை மது அருந்த சொல்லியும் துன்புறுத்தியுள்ளனர்.

அதனை படம்பிடித்த அவர்கள் அந்த மாணவனிடன் 60,000 ரூபாய் கேட்டுள்ளனர்.தரவில்லை எனில் இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இந்த புகாரை அடுத்து, மூன்று மாணவர்களையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பல்கலைகழக பதிவாளர் தெரிவிக்கும் போது, அந்த மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.