ஒரு சேனை பலத்தை கொடுக்கும் சேனைக்கிழங்கு!! காலை கடன் கலகலன்னு வெளியேற இதை பண்ணுங்க!!

Photo of author

By Divya

ஒரு சேனை பலத்தை கொடுக்கும் சேனைக்கிழங்கு!! காலை கடன் கலகலன்னு வெளியேற இதை பண்ணுங்க!!

Divya

நாம் சாப்பிடும் கிழங்கு வகைகளில் அதிக சுவை நிறைந்த சேனைக்கிழங்கு கல்யாண வீட்டு விசேஷ இலை விருந்தில் தனி இடத்தை பிடிக்கிறது.இந்த சேனை கிழங்கில் செய்யப்படும் வறுவல் அதிக சுவை நிறைந்தவையாக இருக்கிறது.அசைவ உணவுகளே தோற்றுப் போகும் அளவிற்கு இந்த கிழங்கு வறுவல் சுவையாக இருக்கும்.

சேனைக்கிழங்கில் கலோரி குறைவாக இருப்பதால் உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்கள் இதை தாராளமாக சாப்பிடலாம்.வாரத்தில் இரண்டு தினங்கள் இந்த கிழங்கை உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.இந்த கிழங்கில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும்.

சேனைக்கிழங்கு சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.சேனைக்கிழங்கில் பொட்டாசியம்,நார்ச்சத்து,இரும்பு,வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்டுகிறது.இந்த சேனைக்கிழங்கை உணவாக எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த கிழங்கை சாப்பிடலாம்.மூல நோய் பிரச்சனை இருப்பவர்கள் இந்த கிழங்கை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.வெயில் காலத்தில் அதிகரிக்கும் உடல் சூட்டை குறைக்க சேனைக்கிழங்கை சாப்பிடலம்.மூட்டு வலி பிரச்சனையால் அவதியடைந்து வருபவர்கள் இந்த கிழங்கை சாப்பிடலாம்.

மூட்டு எலும்புகளின் வலிமையை அதிகரிக்க சேனைக்கிழங்கு பெரிதும் உதவுகிறது.இதில் இருக்கின்ற மெக்னீசியம்,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் எலும்பு வலிமையை அதிகரிக்க உதவுகிறது.அடிக்கடி சேனைக்கிழங்கு சாப்பிட்டு வந்தால் மன வலிமை அதிகரிக்கும்.

இரத்தத்தில் படிந்துள்ள கெட்ட கொழுப்பை கரைக்க சேனைக்கிழங்கை சாப்பிடலாம்.சேனைக்கிழங்கு சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு சரியாகும்.சேனைக்கிழங்கை வேகவைத்து உப்பு,மிளகு மிக்ஸ் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.

ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கத்தால் மலச்சிக்கல் பாதிப்பை எதிர்கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்த மலச்சிக்கல் பாதிப்பில் இருந்து மீள மாத்திரைக்கு பதில் இந்த சேனைக்கிழங்கை சாப்பிடலாம்.