சேலம்: சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் வண்டிக்காரன் என்னும் நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மனைவி பிருந்தா. மணிகண்டன் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டைகள் நடந்துள்ளது. அதில் ஒரு சண்டையில் பிருந்தா பிரிந்து சென்று நாமக்கல்லில் தனியாக வசித்து வந்தார். பிள்ளைகள் இருவரும் அவரின் தந்தையிடம் இருந்தார்கள்.
அதனை தொடர்ந்து இந்த சம்பவத்தன்று மணிகண்டன் வேலை விஷியமாக சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக நாமக்கல் மோகனூர் சாலையில் பிருந்தா வேறொரு நபருடன் சென்றுள்ளதை பார்த்து, அவர்களை பின் தொடர்ந்து சென்று வழிமறித்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. இதில் ஆத்திரத்தில் மணிகண்டன் அவர் மறைத்து வைத்திருந்த ஸ்குரு டிரைவரை எடுத்து பிருந்தா தலையில் குத்தினார்.
அப்போது அவர் தலையில் இருந்து ரத்தம் வலிந்து வலி தாங்க முடியாமல் நாடு ரோட்டில் கீழே விழுந்தார். அதை பார்த்து பொதுமக்கள் பிருந்தாவை மீட்டி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது போலீசார் விசாரணையில் மணிகண்டனின் தம்பி யுவராஜுக்கும் அவரது மனைவி பிருந்தவிருகும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
அதனால் தான் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். அப்போது திடீரென்று அவரது தம்பியுடன் பார்த்த பிருந்தாவை கோபத்தில் இவ்வாறு செய்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து மணிகண்டன் மீது கொலை வழக்கு செய்து அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.