பரபரப்பு சம்பவம்:! கடன் செயலியால் இளைஞர் ஒருவர் தற்கொலை!!
சமீப காலமாக ஆன்லைன் செயலி மூலம் லோன் வாங்கும் நடைமுறை அதிகம் புழக்கத்தில் உள்ளது.இதில் சில மோசடி செயலிகள்,லோன் கட்டிய பிறகும் லோன் கட்டவில்லை என்று வாடிக்கையாளர்களை துன்புறுத்துவதும் மேலும் அவர்களை பற்றி தவறான செய்திகளை அவர் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாடிக்கையாளரின் காண்டாக்ட் மூலம் பரப்புவதும் போன்ற தவறான செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.அவ்வப்போது இது போன்ற செயலிகள் அரசாங்கத்தால் முடக்கப்பட்டாலும் பயனில்லை.வெவ்வேறு பெயரில் வெவ்வேறு செயலைகள் தோன்றி கொண்டே தான் இருக்கின்றன.
தற்போது இது போன்ற செயலி மூலம் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னையில் ஐடி ஊழியர் நரேந்திரன் என்பவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு லோன் செயலி மூலம் 50000 லோன் வாங்கி உள்ளார்.நரேந்திரன் தரப்பில் லோன் திரும்பகட்டப்பட்டதாக கூறப்படுகிறது.ஆனால் செயலின் தரப்பிலோ அவர் லோன் தவணையை கட்டவில்லை என்றும், மீண்டும் 50 ஆயிரம் ரூபாய் தருமாறு அன் நபரை மிரட்டியுள்ளது.ஆனால் அந்த இளைஞர் தராததால் அவரின் தாயாருக்கு தகாத முறையில் அந்த செயலி சார்பாக மெசேஜ் வந்துள்ளது.
இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான நரேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.