கரடியின் பிடி மேலும் இருக்குமா?

Photo of author

By Parthipan K

கரடியின் பிடி மேலும் இருக்குமா?

Parthipan K

தொடர்ச்சியாக  6 வார எழுச்சிக்குப் பிறகு பங்குச் சந்தை கடந்த வாரம் கரடியின் பிடியில் வந்தது. அதாவது,கடந்த ஆறு வாரங்களில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 12% உயர்ந்தது.

இதனால்  மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி ஆகிய இரண்டும் ஒரு சதவீதத்திற்கும் மேல் சரிவை சந்தித்தன.

துறைவாரியாக பார்த்தால் வங்கி, நிதி, எண்ணெய், எரிவாயு நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தது. ஆனால் ஐடி,பார்மா, மெட்டல் ஆகியவற்றிற்கு ஆதரவு  கிடைத்தது. 

அமெரிக்கா-சீனா இடையேயான பதற்றம், இந்த நிகழாண்டில் வாரக்கடன் அதிகரிக்கலாம் என்ற ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை ஆகியயை சந்தையில் எதிரொலித்தது.

இதன் காரணமாகவே, சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் கடந்த ஆறு வாரங்களில் 12 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்தது, நான்கு மாதங்களில் அதிகபட்ச அளவை எட்டியது.