Sensex 1000 புள்ளிகளுக்கு கீழ் சரிவு!! பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்கள் கலக்கம்!!

0
228
sensex-falls-below-1000-points-investors-in-the-stock-market-are-confused
sensex-falls-below-1000-points-investors-in-the-stock-market-are-confused

Sensex 1000 புள்ளிகளுக்கு கீழ் சரிவு!! பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்கள் கலக்கம்!!

இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1062 கீழே புள்ளிகள் சரிந்து 72,404 புள்ளிகளில் வர்த்தகமாகி உள்ளது. அதேபோல் தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 345 புள்ளிகள் குறைந்து 21,957 புள்ளிகளாக நிறைவடைந்தது.
பங்குச் சந்தையின் சரிவின் எதிரொலி முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்பொழுது மக்களவைத் தேர்தல் பலகட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பங்குச்சந்தை ஏற்றத்துடன் இருந்து வந்தது.
இந்நிலையில் நான்காவது காலாண்டில் ஏற்பட்ட மந்தமான முடிவுகளாலும் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு போன்ற காரணத்தாலும் மும்பை பங்குச்சந்தையானது கடும் சரிவை சந்தித்துள்ளது.

மும்பை சென்செக்ஸ் பட்டியலில் 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பங்கு மதிப்பானது சரிவுடன் நிறைவடைந்தது.மேலும் நிஃப்டியில் உள்ள 50 நிறுவனங்களில் 43 நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளது.

மேலும் முக்கிய நிறுவனங்களான ஓ.என். ஜி.எஸ்.சி, டிவிஎஸ் லேப், ஶ்ரீராம் பைனான்ஸ், பங்குகளின் விலையானது மூன்று சதவீதத்திற்கும் கீழ் சரிவடைந்துள்ளது. எல் & டி சந்தை மதிப்பானது 5.6 சதவிகித சரிவை சந்தித்துள்ளது.
இந்த நிலையில்
ஏற்றத்துடன் சென்று கொண்டிருந்த மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையின் குறியீடுகளானது திடீரென சரிவை அடைந்துள்ளதால் பெரும் அச்சத்தை முதலீட்டார்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஒரு சில பங்குகளை தவிர கிட்டத்தட்ட எல்லா பங்குகளும் சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் தேர்தல் முடிவுக்கு பின்னர் பங்குச்சந்தை மீண்டும் உச்சம் செல்லும் என்று வல்லுனர்கள் கருத்து சொல்லியிருக்கின்றனர்.

Previous articleTamil Puthalvan Thittam: இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு ரூ.1000/- வழங்கப்படும்..!
Next articleஅக்காவாக நடிக்க தனது சம்பளத்தை உயர்த்தி கேட்ட நடிகை நயன்தாரா..! எத்தனை கோடி தெரியுமா?