Sensitive Teeth: பல நாள் பல் கூச்சத்திற்கு தீர்வு இந்த வைத்தியம் தான்!! இதை விட பெஸ்ட் இருக்க முடியாது!

0
236
Sensitive Teeth: This remedy is the solution for many days of toothache!! Can't get any better than this!
Sensitive Teeth: This remedy is the solution for many days of toothache!! Can't get any better than this!

Sensitive Teeth: பல நாள் பல் கூச்சத்திற்கு தீர்வு இந்த வைத்தியம் தான்!! இதை விட பெஸ்ட் இருக்க முடியாது!

நம் வாய் மற்றும் முகத்தின் அழகை அதிகரிக்க செய்யும் பற்களை ஆரோக்கியமான முறையில் பராமரிக்க வேண்டும்.பற்கல் மற்றும் ஈறுகள் ஸ்டார்ங்காக இருந்தால் தான் முதுமை காலத்தில் பற்களை இழக்கும் நிலை ஏற்படாமல் இருக்கும்.சிலருக்கு பற்களில் அதிகளவு கூச்சம் உண்டாகும்.எந்த ஒரு உணவையும் சாப்பிட முடியாமல் பற்கூச்சத்தால் அவதியாவார்கள்.சிலருக்கு பல் துலக்கும் பொழுது கூட அதிகளவு கூச்சம் ஏற்படும்.

இவ்வாறு கடுமையான பற்கூச்சத்தால் அவதியடைந்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

தீர்வு 01:

1)வேப்பிலை
2)ஆலமரப்பட்டை
3)இந்துப்பு
4)கருவேலம் பட்டை

ஒரு கப் வேப்பிலை,50 கிராம் ஆலமரப்பட்டை,50 கிராம் கருவேலம்பட்டையை வெயிலில் நன்கு காய வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி இந்துப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்கவும்.இந்த பவுடரை ஒரு டப்பாவில் கொட்டி சேமிக்கவும்.

பயன்படுத்தும் முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி அளவு அரைத்த பொடி மற்றும் 1/2 தேக்கரண்டி கடுகு எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த பேஸ்ட்டை பிரஸில் வைத்து பற்களை துலக்கவும்.இவ்வாறு காலை,இரவு என இருவேளை பற்களை துலக்கி வந்தால் பல் கூச்சத்திற்கு தீர்வு கிடைக்கும்.

தீர்வு 02:

1)கிராம்பு
2)புதினா இலை
3)உப்பு

ஒரு கைப்பிடி அளவு புதினா இலையை நன்கு காய வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக்கி கொள்ளவும்.பின்னர் அதில் 1/4 தேக்கரண்டி உப்பு மற்றும் 5 கிராம்பு சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்து ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி அளவு அரைத்த பொடி மற்றும் 1/2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த பேஸ்ட்டை பிரஸில் வைத்து பற்களை துலக்கவும்.இவ்வாறு காலை,இரவு என இருவேளை பற்களை துலக்கி வந்தால் பல் கூச்சத்திற்கு தீர்வு கிடைக்கும்.