SENSITIVE TEETH: பல் கூச்சம் போக.. அரைக்கீரை வேரை இப்படி பயன்படுத்துங்கள்!!

0
144
SENSITIVE TEETH: To get rid of itchy teeth.
SENSITIVE TEETH: To get rid of itchy teeth.

SENSITIVE TEETH: பல் கூச்சம் போக.. அரைக்கீரை வேரை இப்படி பயன்படுத்துங்கள்!!

உங்களில் சிலர் பல் கூச்சல் அவதியடைந்து வருவீர்கள்.பற்களை முறையாக பராமரிக்காமல் இருத்தல்,ஈறுகளில் வலி,பல் வலி,ஈறுகளில் இரத்த கசிவு உள்ளிட்டவைகள் ஏற்படுத்தல் பல் கூச்சம் உண்டாகிறது.

இந்த பல் கூச்சத்தை போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்.

தேவையான பொருட்கள்:-

1)அரைக்கீரை வேர்

2)நிலவேம்பு

3)மஞ்சள் தூள்

4)வேப்பிலை

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு 4 அல்லது 5 அரைக்கீரை வேரை தண்ணீர் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

இந்த வேரை கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.பிறகு ஒரு தேக்கரண்டி நிலவேம்பு,கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு கொத்து வேப்பிலை போட்டு 2 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த நீரை ஆறவிட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி வாயை கொப்பளித்து வந்தால் பல் கூச்சம் அடியோடு நீங்கும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய்
2)கொய்யா இலை
3)இந்துப்பு

செய்முறை:-

முதலில் 10 கொய்யா இலையை நன்கு உலர்த்தி காய வைத்துக் கொள்ளவும்.பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி தேங்காய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி கொய்யா இலை பொடி சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.

அதன் பின்னர் கால் தேக்கரண்டி இந்துப்பை பொடி செய்து அதில் சேர்த்து குழைத்து பற்களை தேய்த்து வந்தால் பல் கூச்சம் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)கிராம்பு
2)தண்ணீர்

செய்முறை:-

10 கிராம்பை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராககி கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு அரைத்த கிராம்பு தூளை போட்டு ஒரு நிமிடத்திற்கு கொதிக்க வைத்து வாயை கொப்பளித்து வந்தால் பல் கூச்சம் குணமாகும்.