என்ஐஏ -விற்கு துப்பு கொடுத்த செந்தில் பாலாஜி! முதலில் இவரை விசாரியுங்கள்!
கோவை கார் விபத்தானது தற்பொழுது தமிழகத்தில் பூதாகரமாக உள்ளது. இந்த கார் வெடிப்புக்கு பின்னால் பல திடுக்கிடும் உண்மைகள் அடுத்தடுத்தாக வெளி வருகிறது. இந்த கார் வெடிப்பில் உயிரிழந்தவர் நாட்டு குண்டு தயாரிப்பவராக இருந்துள்ளார். இவருடன் மேலும் ஐவர் கூட்டணியாக செயல்பட்டு உள்ளனர். இவர்களெல்லாம் யார் எதற்காக இதனை செய்து வந்தனர் என்று அடுத்தடுத்து கேள்விகள் இருந்து வருகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் கார் வெடிப்பில் உயிரிழந்த நபர் முன்பே இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவர் என்பது தெரிய வந்தது.
தற்பொழுது ஏன் இவர்கள் தமிழ்நாட்டை வந்தடைந்தனர். இவர்களுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்றும் விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்தவர், தான் இறப்பதற்கு முன்பாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இல் நான் செய்த குற்றங்கள் அனைத்தையும் மறந்து எனது இறுதி சடங்கில் கலந்து கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இவ்வாறு இருக்கும் பட்ச்சத்தில் இது எதிர்பாராத விதமாக நடந்த விபத்து போல் தெரியவில்லை. தற்கொலை படை தாக்குதல் போல் உள்ளது. ஆனால் இது குறித்து ஏன் போலீசார் மௌனம் காத்து வருகின்றனர்.
இது குறித்து இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை மாவட்ட காவல் ஆணையர் மற்றும் இதர அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, கார் வெடிப்பு சம்பவம் நடந்து 12 மணி நேரத்திலேயே உயிரிழந்தவரின் விவரங்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டுமின்றி இந்த வருடம் தீபாவளி பொதுமக்கள் எந்த ஒரு இடையூறும் இன்றி நன்றாக கொண்டாடியுள்ளனர். இது அனைத்திற்கும் காவல்துறையை காரணம்.
ஏனென்றால் விரைந்து செயல்பட்டதால் கோவை மற்றும் இதர மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியது. அது மட்டும் இன்றி, யார் சொல்லியும் முதல்வர் என்ஐஏ அதிகாரிகளுக்கு இந்த வழக்கை பரிந்துரை செய்யவில்லை. இந்த விபத்து குறித்து வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதால், என் ஐ ஏ அதிகாரிகளுக்கு இந்த வழக்கை முதல்வர் பரிந்துரை செய்ய முடிவு எடுத்துள்ளார். பாஜக இதனை அரசியலாக்க முடிவு செய்துள்ளது. குறிப்பாக தேசிய புலனாய்வு முதலில் அண்ணாமலையை தான் விசாரிக்க வேண்டும்.
ஏனென்றால் இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விவரங்களை வெளியிடுவதற்கு முன்பே பாஜக தலைவர் சில தகவல்களை கூறினார். இவருக்கு மட்டும் எப்படி முன்கூட்டியே இது பற்றி தெரியும்? அல்லது இவர் சொல்லி தான் இந்த விபத்து நடந்ததா? என கேள்வி செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்.என்ஐஏ முதலில் அண்ணாமலையை தான் விசாரிக்க வேண்டும் என கேட்டுள்ளார்.அத்தோடு பாஜக இந்த கார் விபத்தில் பெருமளவு மூக்கை நுழைத்து மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. மக்களின் அன்றாட பிரச்சனைகள் பல உள்ளது.
அதற்கெல்லாம் முன் நின்று பந்த் அறிவிக்காமல், தற்பொழுது இந்த பிரச்சனைக்கு பந்த் எனக்கூறி மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். முப்படை தளபதி உயிர் இழந்த பொழுது கூட எந்தவித நடவடிக்கையும் பாஜக எடுக்கவில்லை.மேலும் பந்த் என கூறி வணிக நிறுவனங்கள் ஏதேனும் பொதுமக்களை பயமுறுத்தி வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.