புதுமைபெண் திட்டத்தில் சேர தவறிய மாணவிகளின் கவனத்திற்கு! நவம்பர் மாதம் இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

0
86

புதுமைபெண் திட்டத்தில் சேர தவறிய மாணவிகளின் கவனத்திற்கு! நவம்பர் மாதம் இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் தமிழக முதல்வர் அறிவித்த அறிவிப்பின்படி அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்டூ வரை படித்து அவர்களின் மேற்படிப்பு மற்றும் தொழில்நுட்ப படிப்பு பயில்வதற்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும் தற்போது வரை கல்லூரிகளில் இரண்டு,மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இந்த திட்டத்தின் மூலம் உதவி தொகை பெற்று பயன் அடைந்துள்ளனர்.தற்போது முதலாமாண்டு பயிலும் மாணவிகளும் இந்த திட்டத்தில் பயன்பெற https://www.pudhumaipen.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்த தளத்தில் மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக வரும் நவம்பர் 1 தேதி முதல் 11ஆம் தேதி வரை பதிவு செய்யலாம்.இந்த திட்டத்தில் அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் மட்டுமே தகுதியானவர்கள்.மாணவிகள் அவர்களின் கல்வி நிறுவனங்கள்  மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும்.

நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது.புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி பெரும் மாணவிகளுக்கு அவர்கள் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.மாணவிகள் அனைவரும் அவரவர்களின் ஆதார் கார்டு மற்றும் மாற்றுச்சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.

மேலும் தற்போது 2,3 மற்றும் 4ஆம் கல்வியாண்டில் படிக்கும் மாணவிகள் முதலில் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தவறி இருந்தால் அவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் சமூகநல இயக்குனர் அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தை திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை  வரை காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

author avatar
Parthipan K