Breaking News, News, Politics

சிறையில் வசதியாக வாழும் செந்தில் பாலாஜி?? அமைச்சர் ரகுபதியின் முழு விளக்கம்!!

Photo of author

By CineDesk

சிறையில் வசதியாக வாழும் செந்தில் பாலாஜி?? அமைச்சர் ரகுபதியின் முழு விளக்கம்!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விளையாட்டரங்கில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டார். நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முதல் வகுப்பில் அனைவருக்கும் என்ன சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறதோ அதேதான் இவருக்கும் வழங்கப்படுகிறது. குளிர்சாதன வசதிகள் எதுவும் இல்லாத ஒரு சாதாரண அறையில் தான் செந்தில் பாலாஜி தங்கி இருக்கிறார்.

வாரத்திற்கு ஆயிரம் ரூபாய் என்று ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள் அவர் கேண்டீனில் உணவுகளை வாங்கி சாப்பிடலாம். வெளியில் இருந்து அவருக்கு எந்த உணவுகளும் உள்ளே அனுப்பப்படவில்லை.

நீங்கள் எல்லாம் நினைப்பது போல அவர் அமைச்சர் மற்றும் திமுக வின் முக்கிய பிரமுகர் என்று கூறி சிறையினுள்ளே அவருக்கு வசதிகள் எதுவும் வழங்கப்பட்டவில்லை.

வேண்டுமென்றே பத்திரிக்கைகளும், ஊடகங்களும் தவறான செய்திகளை மக்களிடம் பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். சிறையில் அவர் அனைத்து வசதிகளுடனும் இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் முதலமைச்சர் அனுமதி வழங்க மாட்டார்.

மேலும் காவிரி பிரச்சனை, அம்பேத்கார் படம் விவகாரம் என அனைத்தையும் முதல்வரின் அறிவுரைப்படி செய்து கொண்டு வருகிறோம். இவ்வளவு நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விலைவாசி குறைக்க ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்.

நாங்கள் விலைவாசியை கட்டுபடுத்திதான் வைத்திருக்கிறோம். மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மீதான லஞ்ச ஒழிப்பு குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று பல கருத்துக்களை செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் எஸ்.ரகுபதி கூறி உள்ளார்.

இனி வங்கிகள் ஐந்து நாட்கள் மட்டுமா? வெளிவரும் முக்கிய தகவல்!!

பொதுமக்களுக்கு பொன்னான செய்தி!! சவரனுக்கு சற்று விலைகுறைந்த தங்கம்!!