இரண்டாவது நாளாக உயராத பெட்ரோல் டீசல் விலை!

Photo of author

By Sakthi

இரண்டாவது நாளாக உயராத பெட்ரோல் டீசல் விலை!

Sakthi

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரம் குறித்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் இந்தியாவில் இருக்கக்கூடிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை கடைபிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருக்கும் பாரத்பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் , இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்கின்றன. நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் ஜூன் முதல் இந்த எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.

இந்த நிலையில் சென்னையில் என்ற அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 99 ரூபாய் 08 காசுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 93 ரூபாய் 38 காசுக்கும், விற்பனையாகி விடுகிறது