ஆம்புலன்ஸ் கென்று தனி பாதை மற்றும் ஹைடெக் வசதி – கோட்டைக்கு பறந்த அதிரடி!! ஸ்டாலினின் அடுத்த கட்ட மூவ்!!

Photo of author

By Rupa

ஆம்புலன்ஸ் கென்று தனி பாதை மற்றும் ஹைடெக் வசதி – கோட்டைக்கு பறந்த அதிரடி!! ஸ்டாலினின் அடுத்த கட்ட மூவ்!!

Rupa

Separate lane and hi-tech facilities for ambulances - action that flew to the fort!! Stalin's Next Move!!

ஆம்புலன்ஸ் கென்று தனி பாதை மற்றும் ஹைடெக் வசதி – கோட்டைக்கு பறந்த அதிரடி!! ஸ்டாலினின் அடுத்த கட்ட மூவ்!!

மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள் தற்பொழுது தமிழக அரசிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், விபத்துக்கள் ஏற்பட்டால் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்து விரைந்து செல்வதற்குள் ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆம்புலன்ஸ் செல்வதற்கு என்று சாலைகளில் தனி பாதை அமைக்க வேண்டும் என்றும் ஆம்புலன்ஸ் வாகனத்தின் தரத்தையும் உயர்த்த வேண்டும் என கோரியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

தமிழ் நாட்டில் அண்மைக் காலமாக, அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்சில் செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு, கோல்டன் ஹவர்ஸ் எனப்படும் உயிர் காக்கும் நேரத்தை சாலையிலேயே கழிக்கும் அவலநிலை ஏற்படுகிறது.இதைப் போக்குவதற்கு சாலை விதிகளை சீரமைத்து, ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனியாக விரைவுப் பாதையை உருவாக்க வேண்டும்.
ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் செல்லும் போது சம்மந்தப்பட்ட போக்குவரத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, போக்குவரத்தை சீர்செய்திட வேண்டும். கூடுதலாக ஆம்புலன்சிலிருந்து போக்குவரத்துக் காவல் துறையினரைத் தொடர்பு கொள்ளும் வகையில், ஆம்புலன்சில் வயர்லஸ் கருவி பொருத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.