தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் செப்டம்பர் மாதம் !!

0
157

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் செப்டம்பர் மாதம்:

இந்த செப்டம்பர் மாதம் தமிழ் சினிமாவின் முக்கியமான மாதமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இம்மாதத்தில் பல படங்களின் அறிவிப்புகள் மற்றும் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது

விஜய்யின் லியோ:

ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பைப் பெற்ற படமான லியோ திரைப்படம், அடுத்தடுத்த அப்டேட்டுகளை இம்மாதத்தில் வழங்கவிருக்கிறது.அக்டோபர் மாதம் வெளியாக உள்ள இந்தப் படத்தின் “நான் ரெடி தான் வரவா” எனும் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று,இப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகளவு தூண்டச் செய்துள்ளது.இனிவரும் காலங்களில் இப்படம் பற்றிய அப்டேட்கள், இசை வெளியீட்டு விழா, படத்தின் பிரமோஷன் என அனைத்தும், செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என இப்படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

அவ்வாறே தல என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜித், நடிப்பில் மகிழ் திருமிணி இயக்கத்தில், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகள் இம்மாதத்தில் தொடங்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டாரின் 170:

தளபதி,தல எனத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து இப்போது வரை நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்த படம் தான் ஜெயிலர். அப்படத்தைத் தொடர்ந்து, அவரின் 170 ஆவது திரைப்படத்தினை ஞானவேல் ராஜா அவர்கள் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்படத்தின் படப்பிடிப்புகள் வரும் செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் தொடங்கும் எனவும், இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் காலங்களில் வெளியாகும் எனக் கூறியுள்ளனர்.

ரஜினியைத் தொடர்ந்து, ராஜ் கமல் ஃபிலிம் சார்பாக,கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் தான் எஸ்கே21 இந்தத் திரைப்படத்தின் பெயர், மற்றும் போஸ்டரை இம்மாதத்தில் வெளியிடப்படக் குழு முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அயலான், திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தகவல் கிடைத்துள்ளது

படங்களின் தகவல்களைத் தொடர்ந்து, இந்த செப்டம்பர் மாதத்தில் வெளியாக உள்ள திரைப்படங்களின் வரிசை தொகுப்புகள்:

இம்மாத முதல் வாரத்தில் வெளியாக உள்ள திரைப்படம் தன் ஜவான் திரைப்படம் ஆகும். அட்லி இயக்கத்தில்,ஷாருக்கான் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு வெளியாக உள்ளது. நயன்தாராவின் திருமணத்திற்குப் பிறகு வெளிவருகின்ற முதல் திரைப்படமாக இது உள்ளதால், இப்படத்தின் எதிர்பார்ப்புகள் இன்னும் அதிகமாக உள்ளது.

இதனை அடுத்து விஷால் ,எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான படம் தான் மார்க் ஆண்டனி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த படங்களின் வரிசைகளின் படி சந்திரமுகி 2 ,ஜெயம் ரவியின் இறைவன் ,போன்ற பல திரைப்படங்கள் இம்மாதத்தில் வெளியாக உள்ளது

எனவே செப்டம்பர் மாதம் தமிழ் திரைத்துறை ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வாரமாகத் திகழ்கிறது.

Previous articleஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!!
Next article‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்துக்கு ஜோடி இவிங்க தான்! உறுதிப்படுத்திய படக்குழு!