தொடர்கதையாகும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு!!

0
340
#image_title

தொடர்கதையாகும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு!!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

நெஞ்சுவலி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டி ஜாமின் கோரிய போதிலும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தநிலையில், அண்மையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து மீண்டும் ஜாமின் மனு வழங்கினார்.

இன்று விசாரணைக்கு வந்த ஜாமின் மனுவை மீண்டும் தள்ளபடி செய்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அதுமட்டுமல்லாது இந்த வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்குள் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Previous articleதமிழகத்தில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ள மோடியின் “பக்கா ஸ்கேட்”!!
Next articleGOLD வாங்க இது தான் சரியான நேரம்!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை!!