கொரோனாவால் தொடர் உயிரிழப்புகள்! அதிர்ச்சியில் மக்கள்!

Photo of author

By Rupa

கொரோனாவால் தொடர் உயிரிழப்புகள்! அதிர்ச்சியில் மக்கள்!

சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா தொற்று,மக்களை இன்றளவும் விடாது துரத்தி வருகிறது.அந்தவகையில் தற்போது அதிக கொரோனா பாதித்துள்ள நாடக முதலில் அமெரிக்காவும்,இரண்டாவது இடத்தில் பிரேசிலும்,மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது.நான்காவது இடமாக பிரான்ஸ் உள்ளது.ஆனால் ஆரம்பித்த  நாட்டின் பாதிப்பு அதவாது சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.அது பரப்பிய மற்ற நாடுகளில் இத்தொற்றின் தாக்கம் குறையாமல் இன்றளவும் அதிகரித்து தான் வருகிறது.

அந்தவகையில் நமது இந்தியாவில் கடந்த ஓர் நாளில் மட்டும் 1,44,829 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் கொரோனாவின் பாதிப்பு 1.3 கோடியை தாண்டியது.அதே போல கொரோனா தொற்றால் இந்தியாவில் 773 பேர் உயிரிழந்தனர்.அதுமட்டுமின்றி ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,68,467 ஆக உள்ளது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதியானவர்களின் எண்ணிக்கையாக 89.090 ஆக உள்ளது.அதே போல அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையாக 3,48,934 ஆக உள்ளது.

இதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் கொரோனா அதிகம் பரவி வரும் மாநிலங்களைக் காணொளி காட்சி மூலம் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.அந்த ஆலோசனையில் அதிகம் கொரோனா பரவி வரும் மாநிலமாக தமிழ்நாடும் கலந்துக்கொண்டது.அதன்பின் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்தனர்.நமது இந்தியாவில் இதுவரை 9,80,75,160 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 36,91,511 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.தடுப்பூசி கொரோனா பரவலை தடுக்க கொண்டு வந்தாலும் தடுப்பூசி போட்டவர்களுக்கே கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது.