ரஷியாவுக்கு கடும் நெருக்கடி! போரை கைவிடுமா ரஷ்யா?

Photo of author

By Parthipan K

ரஷியாவுக்கு கடும் நெருக்கடி! போரை கைவிடுமா ரஷ்யா?

கடந்த ஐந்து நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. பல நாடுகள் இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து போரை நிறுத்திக்கொள்ள வலியுறுத்தி வருகின்றன. இன்று ரஷ்யா உக்ரைன் மீது ஐந்தாவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

பல நாடுகளும் இந்த போருக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில், உக்ரைன் மீதான இந்த போரை உடனடியாக கைவிட வலியுறுத்தி ரஷ்யாவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஐ .நா. பொதுசபையின் கூட்டத்தில், அமெரிக்கா மற்றும் அல்பேனியா நாடுகள் இணைந்து ரஷியாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானத்தை கொண்டு வந்தன. இதனை தொடர்ந்து, ரஷியாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. 15 உறுப்பினர்கள் கொண்ட இந்த பாதுகாப்பு கவுன்சிலில், 11 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தன. இந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து விவாதிக்க ஐ.நா. பொதுசபையின் சிறப்புக்கூட்டம் இன்று கூடுகிறது.

ஐ.நா. பொதுசபையின் இந்த சிறப்புக்கூட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் ரஷியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.