தீவிரமாகும் மோக்கா புயல்!! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!
வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதியில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக வலுவடைந்தது.இந்த புயலுக்கு மோக்கா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது மாலையிலிருந்து வங்காளதேசம், மியான்மர் அருகே நிலை கொண்டுள்ளது.
இந்த புயலானது அதி தீவிர புயலாக மாறியுள்ளதாகவும், இது கரையை கடக்கும் போது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் தற்போது 9 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும், மே 14ம் தேதி வங்காள தேசம் , வடக்கு மியான்மர் இடையே மோக்கா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.