பாஜக பொதுச்செயலாளர் மீது பாலியல் புகார்! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

Photo of author

By Rupa

பாஜக பொதுச்செயலாளர் மீது பாலியல் புகார்! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

இக்காலக்கட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்புகள் குறைந்து கொண்டே வருகிறது.ஓர் பக்கம் டெக்னாலஜி வளரும் வேளையில் மறுபக்கம் கொலை கொள்ளை தொடர்ந்து நடந்த வண்ணமாகதான் உள்ளது.பெற்றோர்கள் அனைவரும் தங்களின் பெண் பிள்ளைகளை வளர்ப்பதற்கு பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர்.நமது நாடு எவ்வளவு தான் வளர்ந்து வந்தாலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை தடுக்க இன்றளவும் சரியான சட்டம் கூட அமைக்கப் பட வில்லை.தவறுகள் செய்தவர்களை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓர் ஆண்டுகளோ அல்லது இரு ஆண்டுகளோ சிறையில் அடைக்கப்பட்டு விடுகின்றனர்.

இதில் முழுமையாக யாரும் தண்டனையை கூட அனுபவிப்பது இல்லை.பாதி நாட்களிலேயே ஜாமீன் கேட்டு வெளியே வந்துவிடுகின்றனர்.மீண்டும் செய்த தவறையே செய்கின்றனர்.அதுமட்டுமின்றி பெற்றோர்கள் பிள்ளைகளை நம்பி அனுப்புவது பள்ளி மற்றும் கல்லூரிகளில் தான்.தற்போது அந்த இடங்களுக்கே நம்பி அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.பள்ளியில் படிக்கும் பெண் பிள்ளைகளிடம் ஆசிரியர்கள் தவறாக நடந்து கொள்வது.அவற்றை பெற்றோர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கூறினால் உங்களுக்கு மதிப்பெண் போட முடியாது என்று மாணவர்களை அச்சுறுத்துவது.இந்த காரணங்களினால் பெண் பிள்ளைகள் தங்களின் பெற்றோர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கூறாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் பத்மா சேஷாத்ரி பள்ளி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் தவறாக நடந்துக்கொண்டது தற்போது தான் வெட்டம் வெளுச்சமாக வெளிவந்துள்ளது.தற்போது இந்த உண்மைகள் வெளிவந்த முதல் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பாகவே காணப்பட்டது.அதனையடுத்து இரு தினங்களுக்கு முன் சென்னை சேர்ந்த மாணவி ஒருவர் தான் பயின்ற பள்ளியின் ஆசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார்.அந்த பெண்மணி கூறியதாவது,நான் பத்து வருடம் காலமாக தென்னத்தூர் சுப்பிரமணிய ஐயர் பள்ளியில் படித்து வந்தேன்.

இந்த பத்து வருடமாக அந்த பள்ளியில் எனக்கு பாடம் கற்பித்த ஆசிரியர் சிவக்குமார் வெங்கட்ராமன் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.அந்த செய்தியை கேட்ட பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்த பிரச்சனைகள் முடிவு பெறாத நிலையில் மயிலாடுதுறை அருகே பாஜக மேற்கு ஒன்றிய பொதுசெயலாளர் மகாலிங்கம் மாணவிகளுக்கு ஆபாச படம் போட்டு காட்டியுள்ளார்.அதனை போட்டு கட்டியதுடன் அந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லையும் தந்துள்ளார்.

அந்த மாணவிகள் தங்களின் பெற்றோகளிடம் கூறியதால்,பெற்றோர்கள் ஆத்திரமடைந்து  பாஜக மேற்கு ஒன்றிய பொதுச்செயலாளர் மகாலிங்கம் மீது போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.