அரசு பள்ளியில் பாலியல் தொல்லை! ஆசிரியர் கைது

0
248
#image_title
அரசு பள்ளியில் பாலியல் தொல்லை! ஆசிரியர் கைது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பாலியல் தொல்லை என்பது அதிகரித்து கொண்டே வருகிறது. அரசு பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், போன்றவற்றில் பாலியல் தொல்லை என்பது பெண்களுக்கு நடந்து கொண்டுதான் உள்ளது.
இந்த பாலியல் தொல்லைகளை தடுப்பதற்கு அரசு மற்றும் தனியார் அமைப்புகள் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்ட போதும், அதனை தடுப்ப தென்பது இயலாத காரியமாகவே அமைந்து வருகிறது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சென்னையில் கலாசேத்ரா நடன பள்ளியில் நடனம் கற்று கொடுக்கும் ஆசிரியர் ஒருவரே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சுவடு காய்வதற்குள் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் அரங்கேறியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவர்கள் 110 பேரும், மாணவிகள் 129 படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் லட்சுமணன் என்ற ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மாணவிகளை தனிமையில் அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும் இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என கடுமையாக மிரட்டி உள்ளார்.
இதனால் பயந்து போன மாணவிகள் கடந்த ஒரு வருடமாக யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் நாட்கள் செல்ல செல்ல அந்த ஆசிரியரின் பாலியல் தொல்லை எல்லை மீறி போகவே வேறு வழியில்லாமல் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, சம்பந்தபட்ட ஆசிரியர் மீது போக்சோ மற்றும் 10 வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Previous articleநீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம்! ஒரு லட்சம் வழங்க உத்தரவு
Next articleமணல் கடத்தல் விஏஓ கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்