ஜிம்பாப்வே தொடரில் இருந்து விலகிய வீரருக்குப் பதில் புதிய வீரர் அறிவிப்பு

0
164

ஜிம்பாப்வே தொடரில் இருந்து விலகிய வீரருக்குப் பதில் புதிய வீரர் அறிவிப்பு

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இருந்து காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் விலகினார்.

ஆகஸ்ட் 18 முதல் 22 வரை மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் 16வது உறுப்பினராக கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். ராகுல் அணிக்கு கேப்டனாகவும் இருப்பார், முன்பு தலைமை தாங்க இருந்த ஷிகர் தவான் இப்போது துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக இந்த தொடருக்கு ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். காயம் காரணமாக அவதிப்பட்ட கே எல் ராகுல் நேரடியாக அசியக்கோப்பை தொடரில்தான் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது ஜிம்பாப்வே தொடரில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அணியில் இடம்பெற்றிருந்த பந்துவீச்சாளரும் ஆல்ரவுண்டருமான வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்தில் நடந்த ராயல் லண்டன் தொடரில் காயம் அடைந்ததன் காரணமாக விலகியுள்ளார். இந்திய வீரர்கள் ஜிம்பாப்வேக்கு சென்றுவிட்ட நிலையில் மாற்று வீரராக ஆல்ரவுண்டர் ஷபாஸ் அகமது அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக சிறப்பாக விளையாடி கவனம் பெற்றார். இப்போது இந்திய அணிக்குள் இடம்பெற்று அறிமுக தொடரில் விளையாட உள்ளார்.

அணி விவரம்

கே எல் ராகுல், ஷிகர் தவான், ருத்துராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் த்ரிபாட்டி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல், ஆவேஸ் கான், பிரசீத் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர், ஷபாஸ் அகமது.

Previous articleசி எஸ் கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டது இதற்காகதானா? வெளியான தகவல்
Next articleIMAX தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல்படமாக பொன்னியின் செல்வன்