ஷாருக்கானின் கனவுக்கு வேட்டு வைத்த ரசிகர்கள்!! ரூ.1000 கோடி சந்தேகம் தான்!

0
32
#image_title

ஷாருக்கானின் கனவுக்கு வேட்டு வைத்த ரசிகர்கள்!! ரூ.1000 கோடி சந்தேகம் தான்!

தமிழ் மொழியில் வெற்றி படங்களை கொடுத்து வரும் இளம் இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான படம் ஜவான்.இப்படத்தில் நயன்தாரா,விஜய் சேதுபதி,யோகி பாபு,தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார்.கடந்த செப்டம்பர் 7 அன்று உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில் வெளியான இப்படம் தொடர்ந்து வசூலை வாரி குவித்து வருகிறது.

முதல் நாளில் ரூ.130 கோடி வசூலை ஈட்டி ஒட்டு மொத இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது.இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் ரூ.110 கோடி,ரூ.145 கோடி என்று வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் மன்னனாக ஷாருக்கான் வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கிறார்.இதற்கு முன் மற்ற இந்திய படங்கள் செய்த அனைத்து சாதனைகளையும் இந்த ஜவான் படம் முறியடித்து வரும் நிலையில் தற்பொழுது வசூல் ரீதியாக சிறிது ஆட்டம் காண ஆரமித்துள்ளது தகவல் வெளியாகி இருக்கின்றது.

படம் வெளியாகி 5 நாட்கள் நன்றாக ஓடிய நிலையில் விரைவில் 1000 கோடி கிளப்பில் ஷாருக்கானின் ஜவான் இணைந்து விடும் என்று பேசப்பட்டு வந்தது.ஆனால் தற்பொழுது நிலவரப்படி படத்தின் வசூலில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.5 நாட்கள் வசூலில் சக்கை போடு போட்ட ஜவான் 6,7வது நாட்களில் வசூலில் திணறி வருகிறது.இந்த நிலை தொடர்ந்தால் 1000 கோடி கிளப்பில் ஜவான் இணைவது என்பது சந்தேகம் தான் என்ற கருத்து தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கு முன் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் ரூ.1000 கோடியை வசூலித்த நிலையில் தற்பொழுது அவரின் நடிப்பில் வெளியான ஜவான் படம் அந்த சாதனையை முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்தது.ஆனால் படம் வெளியான 7வது நாள் வசூலில் சற்று இறக்கம் ஏற்பட்டுள்ளதால் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.