Home Breaking News டி.என்.பி.எஸ்.சி புதிய தலைவராக சைலேந்திர பாபு… கவர்னர் அனுமதி கிடைப்பதில் சிக்கல்!!

டி.என்.பி.எஸ்.சி புதிய தலைவராக சைலேந்திர பாபு… கவர்னர் அனுமதி கிடைப்பதில் சிக்கல்!!

0
டி.என்.பி.எஸ்.சி புதிய தலைவராக சைலேந்திர பாபு… கவர்னர் அனுமதி கிடைப்பதில் சிக்கல்!!

டி.என்.பி.எஸ்.சி புதிய தலைவராக சைலேந்திர பாபு… கவர்னர் அனுமதி கிடைப்பதில் சிக்கல்…

 

டி.என்.பி.எஸ்.சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு புதிய தலைவராக சைலேந்திர பாபு அவர்களை நியமிப்பதற்கு கவர்னர் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

தமிழக அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதை டி.என்.பி.எஸ்.சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செய்து வருகின்றது. இந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கவர்னரின் நேரடி கட்டுப்பாட்டில் அரசியல் சட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றது. தமிழக மனிதவள மேலாண்மைத் துறையின் சார்பில் தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தலைவர் மற்றும் 13 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆனால் தற்பொழுது 4 உறுப்பினர்கள் மட்டும்தான் பணியில் இருந்து வருகின்றனர். இந்த 4 பேர்களில் உறுப்பினராக உள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி முனியநாதன்.அவர்கள் டி.என்.பி.எஸ்.சியின் தலைவர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். மேலும் நான்கு உறுப்பினர்களுள் ஒருவரின் பணிக்காலம் விரைவில் முடியவுள்ளது.

 

இதையடுத்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு தலைவாரக நியமிக்க ஓய்வு பெற்ற டி.ஜி.பி சைலேந்திரபாபு அவர்களையும் மேலும் 10 புதிய உறுப்பினர்களை நியமிக்கவும் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு பட்டியல் தயாரித்து ஒரு மாதத்திற்கு முன்பு கவர்னருக்கு ஒரு கோப்பு அனுப்பபட்டது.

 

புதிய தலைவர் மற்றும் 10 உறுப்பினர்கள் கொண்ட கோப்புக்கு தமிழக ஆளுநர் ரவி அவர்கள் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என்று தகவல் வெளாயாகியுள்ளது. இதனால் டி.என்.பி.எஸ்.சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.