பெற்ற மகனே தந்தையை சுட்ட அவலம்! படி என்று கூறியதால் ஏற்பட்ட விபரீதம்!

Photo of author

By Rupa

பெற்ற மகனே தந்தையை சுட்ட அவலம்! படி என்று கூறியதால் ஏற்பட்ட விபரீதம்!

தற்பொழுது மாணவர்கள் கொரோனா தொற்றால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருந்தனர்.தற்பொழுது தொற்று பாதிப்பு குறையவே மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.அதுமட்டுமின்றி ஓர் வருட காலமாக மாணவர்கள் ஆன்லைன் மூலமே பாடங்களை படித்தனர்.அந்தவகையில் பலருக்கு ஆன்லைன் கல்வி புரியாமலே போனது.லக்னோவில் பத்தாம் வகுப்பு படிப்பவர் தான் அமன் யாதவ்.இவர் தற்பொழுது நடைபெற்ற தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளார்.அதனால் இவரது பெற்றோர்கள் தொடர்ந்து இவரை நன்றாக படிக்கும் படி அறிவுரை கூறி வந்துள்ளனர்.அமனோ அதனை சிறிதும் கண்டுகொள்ளாமல் மேற்போக்காக இருந்துள்ளார்.

அமனின் தந்ததை தினந்தோறும் நடைபயிற்சி செய்யும் வழக்கம் உடையவர்.இவர் காலை நேரத்தில் நடைபயிற்சி செய்து விட்டு திரும்பும் போது அவரது மகன் அமன் கூட்டமாக தனது நண்பர்களுடன் நின்று பேசி கொண்டிருந்துள்ளார்.இப்படி கூட்டமாக பேசும் நேரத்தில் புத்தகத்தை எடுத்து படித்தால் நல்ல மதிப்பெண் பெறுவான் என்ற எண்ணத்தில் அவரது தந்தை அமனின் நண்பர்களின் முன்னிலையிலேயே வீட்டுக்கு போய் படி என்று கூறியுள்ளார்.அமனோ தந்தை நமது நல்லதிற்கு தான் திட்டினார் என்று நினைக்காமல் தனது நண்பர்கள் மத்தியில் அவமானம் செய்துவிட்டார் என்ற என்னத்தில் வேகாமாக வீட்டிற்கு சென்றுள்ளார்.அமனின் தந்தை செக்யூரிட்டியாக பணிபுரிவதால் பாதுகாப்பு கருதி இவருக்கு துப்பாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.

அமனோ தன் தந்தை வீட்டுக்கு வருவதற்கு முன்னதாக வீட்டுக்கு சென்றுள்ளார்.அதனையடுத்து அவரது தந்தையின் துப்பாக்கியை எடுத்து தயார் நிலையில் வைத்திருக்கிறார்.அவரது தந்தை வீட்டின் வாசலில் நுழைவதற்கு முன்பாகவே அமன் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து தனது தந்தை தோள்பட்டையிலேயே சுட்டுவிட்டு தப்பி ஓடினார்.சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்த பார்த்த போது அமனின் தந்தை இரத்த கரைகளோடு கீழே விழுந்து கிடந்தார்.பிறகு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.பிறகு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதனையடுத்து அமனை போலீசார் தேடி வருகின்றனர்.படி என்று நண்பர்கள் முன்னிலையில் கூறியதை மானாக்கேடாக நினைத்து இவ்வாறு பெற்ற மகனே தந்தையை சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.