ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி 1-3 என்ற நிலையில் தோல்வியை தழுவியுள்ளது. இந்த தோல்வியால் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விட்டது.
இந்த தோல்விக்கு பின் பல விமர்சனங்கள் இந்தியா மீது எழுந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் மீதும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஷமி க்கு காயம் ஏற்பட்ட போது அந்த காயத்தை பிசிசிஐ 6 மாத காலம் மறைத்தது. அதன் பின் தான் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் அவர் இந்த ஆஸ்திரேலியா தொடரில் விளையாடுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் அவர் அணியில் கடைசி வரை இடம்பெறவில்லை. இந்நிலையில் 5 வது ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் பாதியில் பும்ரா வெளியேறினார். அதன் பின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடவில்லை. தற்போது அவருக்கு முதுகில் ஏற்பட்ட காயமானது தீவிரமானது இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரிளும் ஐ பி எல் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என கூறப்பட்டு வருகிறது. இதை பிசிசிஐ மறைத்து வருகிறது எனவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.