இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி முதல் முறையாக ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்று சிறப்பாக பந்து வீசி வருகிறார். இந்த ரஞ்சி கோப்பை போட்டியில் 19 ஓவர்களை வீசி 54 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார். மேலும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இவர் ஒரு நாள் உலககோப்பை போட்டியின் போது காயம் காரணமாக வெளியேறினார் அதன் பின் எந்த சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை. நியூசிலாந்து தொடரில் விளையாடுவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் விளையாடவில்லை.
அதன் பின் ஆஸ்திரேலியா தொடருக்கான வீரர்கள் பட்டியலில் அவர் இடம்பெறவில்லை. மேலும் இவரின் பவுலிங் சோதனை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் முழு உடல் தகுதி பெறவில்லை என்று கூறினார் . அதனால் பிசிசிஐ இவரை ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட அறிவுறுத்தியது. அதனால் இவர் இந்த தொடரி பங்கேற்று சிறப்பாக செயல்பட்டார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் இப்போது ஷமி ஆஸ்திரேலியா தொடரில் இடம் பெறுவாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய ஷமியின் பயிற்சியாளர் தற்போது ஷமி உடல் தகுதி எட்டிவிட்டார் அவர் 100 சதவீத உடல் தகுதியை எட்டியவுடன் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பார் என கூறினார்.மேலும் ஷமி இந்தியா ஆஸ்திரேலியா தொடரின் மூன்றாவது போட்டியில் அவர் கலந்து கொண்டு முக்கிய வீரராக இருப்பார் என்றும் கூறியுள்ளார்.