இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நீண்ட நாட்களுக்கு பிறகு மத்திய பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடினார் முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை எடுத்து வெறித்தனமான கம்பேக் கொடுத்துள்ளார்.
இந்திய அணியின் மிக முக்கிய பவுலர்களில் ஒருவர் முகமது ஷமி. இவர் கடைசியாக ஒரு நாள் உலக கோப்பை தொடரில் விளையாடினார். இந்த போட்டியில் இவர் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். அதன் பின் 7 மாதங்கள் அவர் ஓய்வு எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இவர் எப்போது இந்திய அணியில் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் இந்தியா நியூசிலாந்து இடையேயான போட்டியில் முகமது ஷமி இடம் பெறுவார் என தகவல் வெளியாகியது. ஆனால் அந்த போட்டியில் இந்திய அணியிளிவர் இடம்பெறவில்லை.
அதன் பின் ஷமி முழு உடல் தகுதி பெற்றதாக அறிவித்தார் அதன் பின் பயிற்சியின் போது மீண்டும் கால் வீக்கம் காரணமாக ஓய்வில் இருந்தார். பின் முழு உடல் தகுதி பெற்று பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் இவர் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அனல அந்த பட்டியலில் ஷமி இடம்பெறவில்லை.
ஷமி தற்போது நீண்ட நாட்களுக்கு பின் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். இதன் முதல் போட்டியிலேயே ஷாமி 19 ஓவர்கள் வீசி 54 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இந்த வெறித்தனமான கம்பேக் மூலம் இந்திய அணி ரசிகர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல டிக்கெட் தயார் செய்யுங்கள் என்று குரல் எழுப்பி வருகின்றனர்.