ராஜினாமாவை ரத்து செய்த சரத் பவார்!! கட்சி உறுப்பினர்கள் மகிழ்ச்சி!!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கட்சிப் பொறுப்பிலிருந்தும் தலைவர் பதவியில் இருந்தும் விலகும் முடிவை வாபஸ் பெற்றுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் தலைவருமான சரத் பவார் அக்கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
சரத் பவார் அவர்களின் இந்த திடீர் அறிவிப்பு அந்த கட்சி உறுப்பினர்களுக்கும் தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் அரசியலில் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சரத் பவார் எடுத்த முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.
இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. எப்படியும் சரத் பவார் அவர்களின் மகள் தான் கட்சித் தலைவராக வருவார் என்று தகவல்கள் பரவி வந்தன. இதற்கு மத்தியில் இன்று இந்த தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்யப் போவதாக அந்த கட்சியின் தலைவரும் நிறுவனருமான சரத் பவார் அறிவித்திருந்தார்.
இதையடுத்து ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள் பலரும் இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று சரத் பவார் அவர்களை வலியுறுத்தினர். இவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சரத் பவார் அவர்கள் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்பப் பெற்றுள்ளார்.