விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை!! தமிழக அரசு அறிவிப்பு!!

0
123
Incentives for athletes!! Tamil Nadu Government Notification!!
Incentives for athletes!! Tamil Nadu Government Notification!!

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை!! தமிழக அரசு அறிவிப்பு!!

பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக  வீரர் மற்றும் வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம். இதை பற்றி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

விளையாட்டு வீரர்களுக்கான மூன்று வகையான சிறப்பு உதவித்தொகை திட்டத்தை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயல்படுத்துகிறது.அந்த வகையில், ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்ற தலை சிறந்த வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம்.

இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 25 நபர்கள் வரையிலும், அதிகபட்ச உதவித்தொகையாக ஒரு ஆண்டுக்கு ரூ. 30 லட்சம் வரை உதவித் தொகை பெறமுடியும். இதற்காக  கடந்த 2 ஆண்டுகளில் உலக தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும். அல்லது கடந்த இரண்டு வருடங்களில் ஒலிம்பிக் விளையாட்டுகளிலோ அல்லது உலக சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகளிலோ பங்கேற்றியிருக்க வேண்டும்.  4 வருடங்களில் தமிழ்நாடு சார்பில் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வெல்ல ஊக்குவிக்கும் திட்டம். இதில் அதிகபட்சமாக 10 மாற்றுதிறனாளிகளையும் சேர்த்து 75 நபர்களுக்கும், ஆண்டுக்கு அதிகபட்ச உதவித்தொகை ரூ  12 லட்சம் வரை வழங்கப்படும்.

இதற்காக, அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களால் நடத்தப்படும் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று, ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தனிநபர் பிரிவுகளில் பங்கு பெற்று இருக்க வேண்டும்.

வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம். இந்த உதவித்தொகையில் அதிகபட்சமாக 10 மாற்றுத்திறனாளிகளையும் சேர்த்து 100 பேர் வரையிலும் ஆண்டுக்கு  2 லட்சம் அதிகபட்ச உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு அமைப்புகளால் நடத்தப்படும் தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டங்களின் உதவித்தொகையை பெற, www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் மூலமாக தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம். இன்று முதல் மே 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம்.

மேலும் விபரங்களுக்கு, 9514000777 மற்றும் 7825883865 என்ற ஆடுகளம் தகவல் மையத்திற்கான எண்களை  அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

இதற்கு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுகளில் பதக்கங்களை  வென்ற , தமிழ்நாட்டை சார்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்.

 

author avatar
CineDesk