பங்குச்சந்தையில் 106 பங்குகளில் 17 பங்குகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இதுவரை முதலீட்டாளர்களின் செல்வத்தை இரண்டு மடங்காக அதிகரிக்க வைத்துள்ளது.
அந்தப் பங்குகளில் கிரானுல்ஸ் இந்தியா, டிக்சன் டெக்னாலஜிஸ், அதானி கிரீன்,லாரஸ் லேப், ஆர்த்தி டிரக்ஸ், மற்றும் ஐஓஎன் கெமிக்கல்ஸ் ஆகியவையும் இந்த இரட்டிப்பு லாபம் கிடைத்த பங்குகளில் அடங்கும்.
இதே போன்று இன்னும் சில நிறுவனங்களும் நல்ல வணிக வாய்ப்புக்கு இந்த கொரோனா தொற்று பரவல் மூலமாக அதிக வரவேற்ப்பை பெற்றதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக சந்தையில் சிறிய நடுத்தர பங்குகள் கடந்த சில மாதங்களாகவே அதிக லாபத்தை ஈட்டி வருகிறது.
இதற்கு காரணம் என்னவென்று பங்கு வர்த்தக நிறுவன ஆராய்ச்சிப் பிரிவின் துணைத் தலைவர் அஜித் மிஸ்ரா கூறியதாவது: மதிப்பீடு அதிகரித்தல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் திறக்கப்படுவது போன்றவற்றால் பொருளாதாரம் மீண்டு வருவதாக நம்பிக்கையை முதலீட்டாளர்கள் இடையே அதிகரித்ததே இதற்கு காரணம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.