விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி பெண்ணின் வரிசையில் தற்போது இவரும்!

0
114
She is currently in the line of a woman of Indian descent going into space!
She is currently in the line of a woman of Indian descent going into space!

விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி பெண்ணின் வரிசையில் தற்போது இவரும்!

தற்போது பெண்களுக்கு தனித்துறை, ஆண்களுக்கு தனித்துறை என்று எதுவும் கிடையாது. எல்லா துறைகளிலும் பெண்கள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு வருகின்றன. அப்படி இருக்கும்போது விண்வெளிக்குச் செல்லும் பெண்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்களாக கருதப்படுகின்றனர். விர்ஜின் கேலடிக் என்பது ஒரு அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனம் தனது சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக அடுத்த வார இறுதியில் தனது விண்கலமான யூனிட் 22 என்ற விண்கலத்தை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் நிறுவனத்தின் தலைவரான ரிச்சர்ட் பிரான்சன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு வரும் 11ஆம் தேதி விண்வெளிப் பயணம் செய்ய தயார் ஆகி உள்ளனர். பிரான்சனுடன் சிரிஷா பண்ட்லா, பெத் மோசஸ் மற்றும் கொலின் பென்னட் ஆகியோர் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். விர்ஜின் கெலட்டிக் நிறுவனத்தில் அரசு விவகாரங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளின் துணைத்தலைவராக சிரிஷா என்பவர் இருக்கின்றார்.

விண்வெளி பயணம் மேற்கொள்ள இந்திய வம்சாவளிப் பெண் என்ற பெருமையை ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சிரிஷா பெற்றுள்ளார். 31 வயதான இவர் இந்தியாவில் பிறந்த இரண்டாவது நபராகவும், தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபராகவும் இருக்கிறார். ஆந்திராவில் தனது முன்னோர்களை கொண்ட விண்வெளி பொறியாளர் இவர் ஆவார். ராகேஷ் ஷர்மா, கல்பனா சாவ்லா, மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்குப் பிறகு விண்வெளிக்கு பறக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்காவது நபராக சிரிஷா உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

கல்பனா சாவ்லாவை தொடர்ந்து விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவுள்ள திரிஷாவுக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Previous articleஇனி இவற்றிற்கும் இடம் ஒதுக்கீடு! மாணவர்களுக்கு இன்பச்செய்தி!
Next articleபிரபல யூ டியூப் சேனலுக்கு கிடைத்த பெருமை!! முதல்வர் பாராட்டு!!