சூர்யாவின் அடுத்த படத்தில் இவங்க தான் ஹீரோயின்! செம்ம குஷியில் ரசிகர்கள்!

0
38
#image_title

சூர்யாவின் அடுத்த படத்தில் இவங்க தான் ஹீரோயின்! செம்ம குஷியில் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகில் மாஸ் நடிகராக வலம் வருபவர் சூர்யா.தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.கடைசியாக வெளியான சூரரைப் போற்று,ஜெய் பீம் உள்ளிட்ட படங்களில் தன் நடிப்பை அழகாக வெளிப்படுத்தி அடுத்தடுத்து பட வாய்ப்புகளை அள்ளத் தொடங்கினார்.தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ என்ற படத்தில் நடித்து வரும் சூர்யா அவர்களின் 43வது படத்தை சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.பெயர் வைக்கப்படாத ‘சூர்யா 43’ படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார்.

மேலும் இப்படத்தில் சூர்யா அவர்களுக்கு ஜோடியாக தமிழில் ராஜா ராணி,நேரம் போன்ற படங்களில் நடித்த மலையாள நடிகை நஸ்ரியா நசீம் நடிக்க இருக்கிறார்.பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் அவர்களின் மனைவியான நஸ்ரியா திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தினார்.சில ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிய இவர் ட்ரான்ஸ்,அண்டே சுந்தரநிக்கி உள்ளிட்ட படத்தில் நடித்தார்.இந்நிலையில் தற்பொழுது முதன் முறையாக நடிகர் சூர்யாவின் 43 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

மேலும் இப்படத்தில் மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மம்மூட்டி அவர்களின் மகன் துல்கர் சல்மானும் முதன் முறையாக சூர்யாவின் படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.சமீபத்தில் இயக்குநர் சுதா கொங்கரா ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் சூரரைப்போற்று படத்தை காட்டிலும் பெரிய பட்ஜெட்டில் ‘சூர்யா 43’ படத்தை இயக்க உள்ளதாக கூறினார்.