திரௌபதி படத்தில் நடித்தது ஒரு கெட்ட கனவு! நடிகை ஷீலா சர்ச்சை பேட்டி 

0
555
Sheela Rajkumar
Sheela Rajkumar

திரௌபதி படத்தில் நடித்தது ஒரு கெட்ட கனவு! நடிகை ஷீலா சர்ச்சை பேட்டி

Draupathi:

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. இவர் அடுத்து இயக்கிய ‘திரெளபதி’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அந்த ஆண்டில் அதிக வசூலை வாரிக் குவித்தது.

இதற்கு காரணம் பல ஆண்டுகளாக ஒரு தரப்பு மக்களிடம் தேங்கி கொண்டிருந்த அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த படத்தின் கதை அமைந்திருந்ததது.காதல் என்ற பெயரில் படிக்கும் வயதில் பெண்கள் எவ்வாறு மடை மாற்றப்படுகிறார்கள்.

அவர்களை வைத்து நடக்கும் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவைகளை தெளிவாக இந்த படத்தில் காட்டப்பட்டிருந்தது அதனால் பாதிக்கப்பட்ட மக்களிடம் வரவேற்பையும்,இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் மத்தியில் விமர்சனத்தையும் உண்டாக்கியது.

Sheela Rajkumar:

இந்த படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் மற்றும் கதாநாயகியாக ஷீலா ராஜ்குமார் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்தப்படத்தில் நடித்தது குறித்து ஷீலா ராஜ்குமார் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் அவர் அளித்த அந்த பேட்டியில், சமூக அக்கறை கொண்ட படங்களில் நடித்து வரும் நீங்கள், திரெளபதி படத்தில் நடிச்சது பற்றி எப்படி பார்க்குறீங்க? என்ற கேள்விகேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், அது ஒரு கெட்ட கனவு மாதிரி இருக்கு. இயக்குநர் தனக்கு முழு கதையையும் சொல்லவில்லை. இயக்குநர்கள் வெளிப்படையாக இருந்தால் நல்லது. இதையெல்லாம் எதிர்கொள்வதற்கு நானும் தயாராக இருப்பேன். திரௌபதியை எனக்கு மிகப்பெரிய பாடமாக பார்க்கிறேன்” என சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்திருந்தார்.

ஆனால் படம் வெளியான போது இவரே இந்த கதாபாத்திரம் குறித்து பெருமையாக பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆறாது சினம், டூ லெட், மனுசங்கடா, அசுரவதம், கும்பலாங்கி நைட்ஸ், நம்ம வீட்டுப் பிள்ளை, திரெளபதி, மண்டேலா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார். அடுத்ததாக பர்முடா மற்றும் மாயத்திரை உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.இவ்வளவு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு அடையாளத்தை உருவாக்கி கொடுத்தது திரௌபதி திரைப்படம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleதிருவள்ளூர்  மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்டார்! குண்டர் சட்டத்தில் குற்றவாளிகள் கைது!
Next articleஇனிமேல் தான் என்னோட ஆட்டத்த பாக்க போரிங்க ? வில்லியாக நடிக்கும் நடிகை இவர்தானா ?!..