திருவள்ளூர்  மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்டார்! குண்டர் சட்டத்தில் குற்றவாளிகள் கைது!

0
84
Two arrested in Kallakurichi student incident! Erode police investigation!
Two arrested in Kallakurichi student incident! Erode police investigation!

திருவள்ளூர்  மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்டார்! குண்டர் சட்டத்தில் குற்றவாளிகள் கைது!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொண்டரைக்கரை பகுதியில் வசித்து வந்தவர் மனோகரன். இவர் கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். கடந்த மே மாதம் 15ஆம் தேதி குருவி மேடு எனும் இடத்தில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்று பங்கேற்றார். அந்நிகழ்ச்சி முடிந்தவுடன் இரவு குடும்பத்துடன் தனது காரில் வீடு திரும்பி கொண்டுடிருந்தார். அப்போது அதே பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் திடீரென்று எதிரில் வந்த லாரி திட்டமிட்டு காரின் மீது மோதி கண்ணிமைக்கும் நேரத்தில் 10 பேர் கொண்ட கும்பல் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரனை மற்றும் அவரது மனைவி பிள்ளைகள் கண் எதிரில் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.

மேலும் மனோகரன் மனைவி கூச்சலிடவே அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றது. தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை வழக்கில் மீஞ்சூர் காவல்துறையினர் ஏற்கனவே சுந்தரபாண்டியன், பத்மநாபன் ,அரவிந்த் குமார் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில் வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சாம்பல் கழிவுகளை லாரிகள் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லும் பணியை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வந்ததில் ஏற்பட்ட தொழில் போட்டியால் உருவான முன் விரோதமே இதற்கு காரணம் எனும் தெரியவந்தது.மேலும்  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட குற்றவாளிகள் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில்  10 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் தொடர்ந்து சிறையில் அடைக்க ஆவடி மாநகர காவல் ஆணைய சஞ்சிப் ராய் ரத்ரோர் உத்தரவிட்டுள்ளார்.

author avatar
Parthipan K