காஞ்சிபுரத்தில் ஷிப்ட் முறையில் நடைபெறும் ஸ்கூல்! பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்!

0
172
Shift school in Kanchipuram! Parents besieging the school!
Shift school in Kanchipuram! Parents besieging the school!

காஞ்சிபுரத்தில் ஷிப்ட் முறையில் நடைபெறும் ஸ்கூல்! பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம் அனுபுரம் என்ற  நகரத்தில்  அணுசக்தி மத்திய மேல்நிலைப்பள்ளியின் பெயரில் மூன்று பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் 1000  கணக்கான மாணவ-மாணவியர்கள் படித்து வருகிறார்கள். மேலும் இந்த  பள்ளிகளில் நடைபெறும் சீர்கேடுகளை கண்டித்து குழந்தைகளின் பெற்றோர்கள்  நேற்று பள்ளியின் முன்பாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த  போராட்டத்தின் முக்கிய நோக்கமானது பள்ளியில் பயிலும் மாணவர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் படித்து வருகிறார்கள். ஆனால் இந்த பள்ளியில் 23 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை இருக்கின்றது.

தங்களின் குழந்தைகளின் கல்வி பாதிப்படையும் எனவும் இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த  பள்ளிகள்   ஷிப்ட் முறையில் செயல்படுகிறது மற்றும் நேரடி வகுப்புக்கள் ஆரம்பித்த நிலையிலும் ஆசிரியர்கள் இல்லாததால் இணைய வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை அனைத்தும் உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும்   கோரிக்கை விடுத்தனர்.இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகமானது இதுகுறித்து மும்பை தலைமையகத்திற்கு தெரிவிப்பதாகவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் உறுதியளித்தனர். பின்பு இந்தப் போராட்டமானது கலைந்தது.

Previous article+1 மாணவர் சேர்க்கையின் இட ஒதுக்கீடு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு!
Next articleவயிற்று வலி மாத்திரை சாப்பிட்டு  பட்டதாரி மாணவி திடீர் மரணம்! நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சோகம்!