பரபரப்பான போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி… சதத்தை தவறவிட்ட தவான்!

Photo of author

By Vinoth

பரபரப்பான போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி… சதத்தை தவறவிட்ட தவான்!

Vinoth

பரபரப்பான போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி… சதத்தை தவறவிட்ட தவான்!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களின் வெற்றிக்குப் பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது. இதில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது.

டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தவான் மற்றும் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். சிறப்பாக விளையாடிய கில் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் தவானும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷிகார் தவான் 97 ரன்களில் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 308 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் பதிலுக்கு சிறப்பாக விளையாட, ஆட்டம் கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது.  ஆனால் கடைசி ஓவரில் இலக்கை எட்ட முடியாமல் 305 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் முதல் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.