தோள்பட்டையில் அடி; களத்தில் இருந்து வெளியேறிய தவான் ! பேட்டிங் செய்வாரா ?

0
213

தோள்பட்டையில் அடி; களத்தில் இருந்து வெளியேறிய தவான் ! பேட்டிங் செய்வாரா ?

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸியும் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் மூன்றாவது போட்டி இன்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. முதலில் தடுமாற்றத்தை சந்தித்தாலும் பிறகு நிதானித்து ஆடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னரை குறைந்த ரன்களிலேயே இந்திய பவுலர்கள் அவுட் ஆக்கிவிட்டதால் ஆஸ்திரேலியாவின் ரன் ரேட் வழக்கத்தை விட குறைந்துள்ளது.

ஆனாலும் அதன் பின் ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் லபுஷான் ஆகியோர் நிலைத்து நின்று ஆடி சரிவைத் தடுத்தனர். இந்நிலையில் களத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவானுக்கு தோள்பட்டையில் அடிபட்டது. அதனால் அவர் களத்தில் இருந்து வெளியேறினார்.

அவருக்குப் பதிலாக இப்போது சஹால் பீல்ட் செய்து வருகிறார். ஆஸ்திரேலியா விளையாடும் வேகத்தைப் பார்த்தால் எப்படியும் இலக்கு 300 ஐ நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஷிகார் தவானின் பேட்டிங் இந்திய அணிக்கு இன்றியமையாதது. அதனால் அவர் பேட் செய்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது 9 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார். சற்று முன்பு வரை ஆஸி அணி 6 விக்கெட்களை இழந்து 241 ரன்கள் சேர்த்துள்ளது.

Previous articleபொங்கலுக்கு மட்டும் 600 கோடி வசூல்! கெத்து காட்டிய குடிகார புள்ளீங்கோ!!
Next articleசேலம் மாவட்ட வன்னியர்களை குறி வைக்கும் திமுக எம்பி! விழித்து கொள்ளுமா பாமக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here