ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி… கோஹ்லி இடம்பெற்றாரா? வெளியான அணி விவரம்!

0
212

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி… கோஹ்லி இடம்பெற்றாரா? வெளியான அணி விவரம்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாக மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இதற்கிடையில் அவர் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்ததால் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். உள்ளூர் போட்டிகளில் விளையாடி மீண்டும் ஃபார்முக்கு வந்து இந்திய அணியில் விளையாட வேண்டும் எனவும் கருத்துகள் எழுந்துள்ளன.

இதனால் அவருக்கு சில தொடர்களில் ஓய்வளிக்கப்பட்டு வருகிறது. தற்போது நடந்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் அவர் விளையாடவில்லை. ஆனால் அடுத்து நடக்க உள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அவர் களமிறங்குமார் என எதிர்பார்க்கபப்ட்டது. ஆனால் தற்போது அந்த தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. இதனால் அவர் இனிமேல் நேரடியாக ஆசியக் கோப்பை தொடரில் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அணி விவரம்

ஷிகர் தவான் (கேப்டன்), ருத்துராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் த்ரிபாட்டி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல், ஆவேஸ் கான், பிரசீத் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்.

Previous articleசேலம்,நாமக்கல் மாவட்டங்களில் இந்த இரு நாட்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை !! வானிலை ஆய்வு மையம் தகவல்!..
Next articleடி 20 உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்… பிசிசிஐ அதிகாரி ஒருவரின் லேட்டஸ்ட் அப்டேட்!