பப்ஜி மதனுக்கே டப் கொடுக்கும் ஷில்பா ஷெட்டியின் கணவன்!! அதிரடி கைது!!

Photo of author

By CineDesk

பப்ஜி மதனுக்கே டப் கொடுக்கும் ஷில்பா ஷெட்டியின் கணவன்!! அதிரடி கைது!!

சேலத்தை சேர்ந்த மதன் என்பவர் சில வருடங்களாக யூடியூப் சேனலை உருவாக்கி அதில் சம்பாதித்து வந்தார். மேலும் அந்த சேனலில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடி வருகிறார். மேலும் அந்த விளையாட்டை இல்லீகளாக இந்தியாவில் விளையாடி வந்தார். அதை தனது யூடியூப் சேனலில் பதிவு செய்து வருகிறார்.

மேலும் அந்த விளையாட்டின் போது அவர் ஆபாசமானா பேச்சையும் பேசிவருவார் மற்றும் பல பெண்களுக்கு ஆபாச தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. பல பெண்களிடம் பண ஏமாற்றம் கூட செய்துள்ளார் என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகின்றனர். இது சில வருடங்களாகவே தொடர்ந்து வந்ததன் பேரில், பப்ஜி மதனை பற்றிய புகார் ஒன்று சேலம் காவல்துறையினருக்கு வந்தது. இதையடுத்து அவரை கைது செய்ய செல்லும் பொழுது அவர் தலைமறைவாகிவிட்டார். மேலும் இரண்டு நாட்களுக்கு பிறகு அவரை கண்டுபிடித்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அது பற்றிய விசாரணை இன்னும் நடைபெற்று கொண்டுள்ளது.

இந்த நிலையில் பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டி செட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்திரா ஆபாச படங்களை தயாரித்து மொபைல் ஆப் ஒன்றில் வெளியிட்டு வந்திருக்கிறார். தகவலறிந்து மும்பை குற்றப் பிரிவினர் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் இந்த செய்தி தற்போது இணையதளங்களில் வெளியாகி பாலிவுட் வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.