அம்மாவை ஏமாத்த முதியவர் வேடமிட்டு சென்ற சிவாஜி – வெளியான சுவாரஸ்ய சம்பவம் !!

0
107
#image_title

அம்மாவை ஏமாத்த முதியவர் வேடமிட்டு சென்ற சிவாஜி – வெளியான சுவாரஸ்ய சம்பவம்

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் வகுத்து கொடுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் தமிழ் மட்டுமல்ல பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் சின்ன வயதிலிருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்டவராக இந்த சிவாஜி முதலில் மேடை நாடகங்களில் நடித்தார்.

இதனையடுத்து, தமிழில் முதன்முதலாக தமிழில் ‘பராசக்தி’ என்ற படம் மூலம் அறிமுகமானார். இதன் பின்பு தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். உணர்ச்சிப் பூர்வமாக நடிப்பதிலும், தமிழ் உச்சரிப்பதிலும், நல்ல குரல்வளமும், சிறந்த நடிப்புத் திறனும் கொண்டிருந்ததால, இவரை ‘நடிகர் திலகம்’ என்றும், ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

தற்போது சமூகவலைத்தளங்களில் சிவாஜி குறித்த ஒரு சுவாரஸ்ய செய்தி வைரலாகி வருகிறது.

அதாவது, அவர் ‘திருவருட்செல்வர்’ என்ற படத்தில் சிவனடியார் கதாபாத்திரத்தில் நடித்தாராம். அவருடைய நடிப்பை படப்பிடிப்பில் இருந்தவர்கள் அனைவரும் பாராட்டினார்களாம்.

வயதான தோற்றத்தில் கூன் விழுந்து யாரும் கண்டுபிடிக்காத வகையில் அவரின் மேக்கப் இருந்ததாம். உடனே சிவாஜிக்கு ஒரு யோசனை வந்தது. இந்த தோற்றத்துடன் நம் வீட்டிற்கு சென்று நம்ம அம்மாவை ஏமாற்றலாம் என்று திட்டமிட்டாராம்.

கார் டிரைவரிடம் நேராக வீட்டிற்கு செல். வரும் வழியி எங்கும் காரை நிறுத்தாதே என்று கூறிவிட்டாராம். இவர் சொன்னதை போலவே கார் டிரைவரும் காரை வீட்டிற்கு ஓட்டிச் சென்றாராம்.

வீட்டிற்கு சென்ற கார் வாசலில் நின்றது. சிவாஜியின் கார் வருவதை கண்டு வீட்டுக் காவலாளி வேகமாக வந்து வாயிற் கேட்டை திறந்தாராம். ஆனால், கார் உள்ளே வரவில்லை. உடனே காரிலிருந்து கீழே இறங்கிய சிவாஜி, மெதுவாக உஷ் என்று காவலாளியை அமைப்படுத்திவிட்டு வீட்டு வாசலில் சென்றாராம்.

அம்மா தாயே… என்று கத்தினாராம். உடனே உள்ளே இருந்து சிவாஜி தாய் ராஜாமணி அம்மாள் வந்தாராம். உடனே சிவாஜி, அம்மா தாயே…. நான் ஒரு சிவபக்தன்.. வரும் வழியில் யாரிடமாவது உணவு வாங்கி சாப்பிடுவேன். ஆதலால் உனக்கு ஒரு வாய் சோறு கிடைக்குமா என்று கேட்டாராம். உடனே ராஜாமணி அம்மா பரவசமடைந்து… உள்ளே வாருங்கள்.. என்று பயபக்தியோடு அழைத்துச் சென்று சாப்பாடு போட்டாராம். அவர் சாப்பிடுவதைப் பார்த்த தாய் ராஜாமணி அம்மா, இவர் சாப்பிடுவது நம் மகன் சிவாஜி சாப்பிடுவது போல இருக்கே என்று சந்தேகத்தோடு பார்த்தாராம். அப்போது, அம்மாவின் சந்தேகப் பார்வைப் பார்த்த சிவாஜி சத்தமாக சிரித்து விட்டாராம்.

 

Previous articleஇசைப் பள்ளியில் படித்தால் அரசு வேலை கிடைக்குமா ? ஆச்சரியமூட்டும் தகவல்கள் !!
Next articleநயன்தாரா செய்த சாதனை.. தங்கமே உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் – விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!!