நயன்தாரா செய்த சாதனை.. தங்கமே உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் – விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!!

0
52
#image_title

நயன்தாரா செய்த சாதனை.. தங்கமே உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் – விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!!

கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா முதன் முதலாக பாலிவுட்டில் ஜவான் என்ற படத்தில் நடித்து ஹிந்தி ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான்,நயன்தாரா நடிப்பில் உருவான ஜவான் படம் கடந்த செப்டம்பர் 7 அன்று உலகம் முழுவதும் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்து வருகிறது.இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ள நயன்தாராவுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து பிரபல ஐஎம்டிபி இணையதளத்தில் இந்திய பிரபலங்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்து நயன்தாரா அசத்தியுள்ளார். ஐஎம்டிபியின் இந்த வார இந்திய பிரபலங்கள் வரிசையில் பாலிவுட் பாட்ஷாவாக கொண்டாடப்படும் நடிகர் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி நயன்தாரா முதலிடம் பிடித்துள்ளார்.இதனை தொடர்ந்து ஷாருக்கான் இரண்டாவது இடத்திலும், அட்லீ மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.

ஐஎம்டிபி வரிசையில் முதலிடம் பிடித்த நயன்தாராவிற்கு அவரது கணவர் விக்னேஷ் சிவன் சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.சமூக வலைத்தள பக்கத்தில் தங்கமே உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் என பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு தற்பொழுது வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.