தன் தாயின் கண்ணீரைப் பார்த்த சிவாஜி.. – என்ன செய்தார்ன்னு தெரியுமா?

0
57
#image_title

தன் தாயின் கண்ணீரைப் பார்த்த சிவாஜி.. – என்ன செய்தார்ன்னு தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் வகுத்து கொடுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் தமிழ் மட்டுமல்ல பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் சின்ன வயதிலிருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்டவராக இந்த சிவாஜி முதலில் மேடை நாடகங்களில் நடித்தார்.

இதனையடுத்து, தமிழில் முதன்முதலாக தமிழில் ‘பராசக்தி’ என்ற படம் மூலம் அறிமுகமானார். இதன் பின்பு தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். உணர்ச்சிப் பூர்வமாக நடிப்பதிலும், தமிழ் உச்சரிப்பதிலும், நல்ல குரல்வளமும், சிறந்த நடிப்புத் திறனும் கொண்டிருந்ததால, இவரை ‘நடிகர் திலகம்’ என்றும், ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

நடிகர் சிவாஜி எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். அதில் சிவாஜிக்கு சம்பூரண ராமாயணம் படம் முக்கியப் பங்கு வகிக்கும். இப்படத்தில் சிவாஜி பரதன் வேடம் போட்டு அற்புதமாக நடித்திருப்பார். என்.டி.ராமராவ் ராமராக நடித்திருப்பார்.

இப்படம் வால்மீகியின் ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் சிவாஜி நடிப்பை பார்த்த காஞ்சி பராமாச்சாரியார் சிவாஜியை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.

உடனே சிவாஜி தன் மனைவி, தாய், தந்தையுடன் காஞ்சிபுரம் புறப்பட்டு சென்று காஞ்சி பராமாச்சாரியாரை சந்தித்தார். அப்போது, பராமாச்சாரியார் சிவாஜியையே சற்று நேரம் உற்று நோக்கிக் கொண்டிருந்தார்.

உடனே, சிவாஜி அம்மாவைப் பார்த்த, இந்த மாதிரியான பிள்ளையை பெற்றெடுத்ததற்கு நீ புண்ணியம் செய்திருக்க வேண்டும். உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறோம் என்று கூறிவிட்டு ஆசீர்வாதம் செய்தாராம்.

அப்போது, சிவாஜி தன் அம்மாவை பார்க்க, அவரின் தாயின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்த தன் தாயின் கண்ணீர் துளிகள்தான் தனக்கு கிடைத்த பெரிய விருது என்று எண்ணி சிவாஜி சந்தோஷப்பட்டாராம்.