இரு ஜாம்பாவான்களின் கணிப்பை பொய்யாக்கிய சிவாஜியின் நடிப்பு
சினிமாவை தொழிலாக பார்க்காமல் வாழ்க்கையாகவே வாழ்ந்த தமிழ் திரையுலக ஜாம்பவான் சிவாஜி அவர்கள் பட்டி தொட்டி மக்களை தனது அசுர நடிப்பால் கட்டி போட்டவர். நடிப்புக்கு உயிர், உருவம் கொடுத்து அழகாக தனது நடிப்பை வெளிக்காட்டி நடிகர் திலகம் என்று கொண்டாடப்பட்ட தலை சிறந்த நடிகர் சிவாஜி.
‘அடேங்கப்பா என்ன ஒரு நடிப்பு டா சாமி.. உன் நடிப்பில் சிவாஜி கணேசனே தோற்று போய்விடுவார்’ என்று நம் ஊர் மக்களிடம் இந்த பேச்சு வழக்கமாக இருக்கிறது. அந்த அளவிற்கு சிவாஜி அவர்களின் நடிப்பு காலம் கடந்தும் பேசும் அளவிற்கு தமிழ் சினிமா என்ற கல்வெட்டில் தன் பெயரை ஆழமாக பதித்துவிட்டு சென்று இருக்கிறார்.
இப்படி ஆகா.. ஓஹோ.. என்று நாம் புகழும் சிவாஜி அவர்களின் நடிப்பில் வெளியான ‘படிக்காத மேதை’ என்ற படம் உருவாவதற்கு முன் படத்தின் கதையை வைத்து இந்த படம் வெற்றி பெறாது என்று நினைத்தேன் என பிரபல இயக்குநர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இயக்குநர் பீம்சிங் அவர்கள் கண்ணதாசனிடம் தனது “படிக்காத மேதை” படத்தின் கதையை கூறி இருக்கிறார். அப்பொழுது பஞ்சு அருணாச்சலம் அவர்கள் கண்ணதாசனிடம் திரைக்கதை ஆசியராக பணியாற்றி வந்துள்ளார். பீம்சிங் கூறிய கதையை கேட்ட பஞ்சு அருணாச்சலம் அவர்கள் இந்த கதை மக்களிடம் சென்று சேராது என்று தான் முதலில் நினைத்தாராம். ஆனால் கதையை வைத்து வெற்றி, தோல்வியை கணிக்கும் அவரின் கணிப்பையே பொய்யாக்கும் அளவிற்கு சிவாஜியின் நடிப்பால் அந்த படம் மாபெரும் வெற்றி படமாக கொண்டாடப்பட்டது. இவரின் கணிப்பு மட்டும் அல்ல பிரபல இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் கணிப்பையும் பொய்யாக்கி இருக்கிறது சிவாஜியின் நடிப்பு.
மேலும் சிவாஜியை தவிர வேறு யாரு நடித்திருந்தாலும் அந்த படம் தோல்வியை தான் தழுவி இருக்கும் என்று பஞ்சு அருணாச்சலாம் கூறி இருக்கிறார்.