Shivani Narayanan – கோவில் என்றும் பார்க்காமல் ஷிவானி நாராயணன் இப்படி பண்ணலாமா?
திரைத்துறையில் பிரபலமாக உள்ள முன்னணி கதாநாயகிகள்,இழந்த மார்கெட்டை பிடிக்க துடிக்கும் கதாநாயகிகள் என அனைவரும் தங்களுடைய அடுத்தடுத்த பட வாய்ப்பிற்காகவும்,ரசிகர்களை அப்டேட்டில் வைத்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய புகைப்படங்களை பதிவேற்றி வருவது வழக்கமானது தான்.

ஆனால் சமூக வலைத்தளங்களில் கிடைத்த அங்கீகாரத்தின் மூலமாக திரைக்கு வந்தவர் தான் சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன்.4 மணி ஷிவானி என்ற செல்ல பெயர் வைத்து ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தினமும் எதாவது ஒரு கவர்ச்சி புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
மாடல் அழகியான இவர் சமூக வலைத்தளம் மூலமாக சின்னத்திரைக்குள் நுழைந்து அதன் மூலமாக பிரபலமாகி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் ஒரு சிறிய காதாபாத்திரத்தில் நடித்த இவர் பின்னர் ஒளிபரப்பான பகல் நிலவு தொடரில் நாயகியாக நடித்து சின்னத்திரையில் பிரபலமானார்.

ஜீ டிவியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா, கடை குட்டி சிங்கம் என்ற தொடர்களில் நடித்ததன் மூலமாக மேலும் பிரபலமான இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.இரட்டை ரோஜா தொடரில் இரட்டை வேடங்களில் நடித்தற்காக இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடிக்கும் போது அவருடன் இணைந்து நடித்த அசிம் உடன் காதல் கிசுகிசுக்கபட்டதால் பாதியிலேயே தொடரிலிருந்து விலகினார்.இரட்டை ரோஜா தொடரில் நடித்து கொண்டிருக்கும் போதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததால் தொடரிலிருந்து விலகினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் உடனிருந்த பாலாஜி முருகதாஸ் பின்னாடி சுற்றியதால் ரசிகர்கள் அவரை வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அவர் வழக்கம் போல ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி விருந்து வைக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CgQzoDeve05/?igshid=YmMyMTA2M2Y=
கோவிலுக்கு சென்ற அவர் அங்கேயும் தன்னுடைய வழக்கமான வேலையான போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கையில் மாலையுடன் நெற்றியில் திருநீறுடன் இருக்கும் அந்த போட்டோவை பார்த்த அவருடைய ரசிகர்கள் வித விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
அதில் சிலர் ஆர்வக் கோளாறில் கோவிலை கூட விட்டு வைக்கலயா? இங்க இப்படி பண்ணலாமா என அட்வைஸ் பண்ணும் தொனியில் கமெண்ட் செய்துள்ளனர்.