தமிழகத்தில் மயோனைஸ் முழுவதுமாக தடை செய்யப்படுவதாக தமிழக அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடல் நலனுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்பதால் இந்த தடை விதிக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் லால் வேணா திருவிருப்பது குறிப்பிடத்தக்கது.
மயோனைஸ் என்பது பச்சை முட்டை எலுமிச்சைச்சாறு எண்ணெய் போன்றவற்றால் தயாரிக்கப்படுகிறது என்றும் பெரிய கடைகள் முதல் சாலையோர கடைகள் வரை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டதோடு இந்த மயோனைஸ் இடம்தான் சிக்கன் சாண்ட்விச் போன்ற அனைத்தையும் மக்கள் சாப்பிட்டு வருவதாகவும் இதனால் மக்களுக்கு அதிக அளவு ஆபத்துக்கள் ஏற்படும் என்றும் உயிர் இழப்பு இதனால் நடந்திருக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
உயிர் இழப்பு ஏற்படும் அளவிற்கு மயோனிசில் ஆபத்து இருப்பதால் பல மாநிலங்களில் மயானசுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் தெலுங்கானாவில் மயோனைஸ் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானாவை தொடர்ந்து தற்பொழுது தமிழகத்திலும் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் இந்த தடையானது அமலுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பேசுறேன் இதுக்கு குறித்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் ஆர் லால் வேணா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பது :-
முட்டையின் உடைய மஞ்சள் கரு எண்ணெய் வினிகர் போன்றவற்றால் உருவாக்கப்படக்கூடிய மயோனைஸ் ஷவர்மா போன்ற உணவுப் பொருட்களுடன் பரிமாறப்படுவதாகவும் இந்த மயோனைசை சாப்பிடுவதால் அதிக ஆபத்து விளைவிக்கும் என தெரிவித்திருக்கிறார். மேலும் பல உணவு கடைகளில் மயான செய் தயாரிப்பதற்கு பச்சை மூட்டையை பயன்படுத்துவது மற்றும் முறையற்ற தயாரிப்பு சேமிப்பு வகைகள் போன்றவற்றால் நுண்ணுயிரிகளால் மாசுபட்ட நோய்கள் பரவுகிறது என்றும் இது உயிருக்கே மிகவும் ஆபத்தானதாக முடிகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக, மயோனைஷில் சால்மோனெல்லா , டைபிமுறியம் லிஸ்ட்டிரியா போன்ற பல தீங்க விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்கள் இருப்பதாகவும் இது உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அது மட்டுமல்லாத உணவு கடைகளில் ஆய்வு மேற்கொண்ட பொழுது அவற்றை முறையாக தயாரிப்பதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இதனால் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006 பிரிவு 30 (2)(a) கீழ் ஒரு வருடத்திற்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும் நீரும் கடைகள் மீது அபராதமும் உரிமம் ரத்து செய்யப்படும் என சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.